மணிப்பூர் விவகாரம்: மேலும் மூன்று குற்றவாளிகள் கைது!

மணிப்பூர் விவகாரம்: மேலும் மூன்று குற்றவாளிகள் கைது!
Published on
Updated on
1 min read

மணிப்பூாில் பழங்குடியின பெண்களை நிா்வாணமாக அழைத்து சென்ற வழக்கில் 4 பேரை போலீசாா் கைது செய்துள்ளனா். 

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று பேரை போலீசாா் கைது செய்துள்ளனா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மணிப்பூர் தலைமைச் செயலாளர், டிஜிபி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தொிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அதில் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவில் உள்ள ஆண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சுவாதி மலிவால் குறிப்பிட்டுள்ளாா். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான உண்மை கண்டறியும் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com