
சமீபத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிக அளவில் பொதுவெளியில் Exposed ஆவதை நம்மால் காண முடிகிறது. மேலும் இந்த திருமணத்தை மீறிய உறவுகளால் மோசமான விளைவுகள் ஏற்படுவதையும் பார்க்கமுடிகிறது. அந்தவகையில் இன்று இணையத்தை வைரலாக்கி வரும் ஜோடிதான் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன் மற்றும் மனித வளத்துறை அலுவலர் கிறிஸ்டின் கபோட்.
ஆண்டி பைரன் -க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் சிக்கிக்கொண்ட விதம் தான் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் 'கிஸ் கேம்' தருணத்தின் போது அரங்கில் முத்தமிடும் அல்லது நெருக்கமாக இருக்கும் ஜோடிகள் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டு அவர்கள் திரையில் தெரிவார்கள். அப்படியான தருணத்தில் ஆண்டி பைரன், கிறிஸ்டின் கபோட்டை பின்னால் இருந்து கட்டியணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேமரா மென் அவர்கள் மீது லைட்டை திருப்ப அவர்கள் முகம் ஸ்கிரீனில் தெரிந்துள்ளது. இதனால் இருவரும் அசௌகரியமடைந்து முகத்தை மறைக்க முயன்றனர். அவர்கள் மாட்டிக்கொண்ட உணர்வு இருவர் முகத்திலும் தெரிந்தது பின்னர். இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர்.
இதனைக் கண்ட சுற்றி இருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலாகி விட்டது. எங்கு திரும்பினாலும் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இவரின் மனைவி மேகன் பைரன், Facebook - இல் தனது பெயருக்கு பின் இருந்த பைரன் என்ற தனது கரவரின் பெயரை தூக்கிவிட்டதாகவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை டீ - ஆக்டிவேட் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தற்போது ஆண்டி பைரான் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இசையும் மகிழ்ச்சியும் நிறைந்த இரவாக இருக்க வேண்டிய நிகழ்வு, பொது மேடையில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆழமான தனிப்பட்ட தவறாக மாறிவிட்டது. என் மனைவி, என் குடும்பத்தினர் மற்றும் ஆஸ்ட்ரோனமர் குழுவினரிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, ஒரு தலைவராக நீங்கள் என்னிடமிருந்து சிறந்ததைப் பெற வேண்டும். ஒரு தனிப்பட்ட தருணமாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வு எனது அனுமதியின்றி பகிரங்கமானது எவ்வளவு கவலையளிக்கிறது என்பதையும் நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் கலைஞர்களை மதிக்கிறேன், ஆனால் வேறொருவரின் வாழ்க்கையை காட்சியாக மாற்றுவதன் தாக்கத்தைப் பற்றி நாம் அனைவரும் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.