இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.. 60 லட்சம் பேர் உணவுப்பொருள் கிடைக்காமல் அவதி!!

இலங்கையில் சுமார் 60 லட்சம் பேர் உணவுப் பொருள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.. 60 லட்சம் பேர் உணவுப்பொருள் கிடைக்காமல் அவதி!!
Published on
Updated on
1 min read

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், மின்சாரம் மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வினியோகம் செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பால் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த 4-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் விலையேற்றம் காரணமாக சமை­யல் எரி­வாயு கிடைப்­பதும் அரிதாகிப்போனது. இதனால் அங்கு வாழ்க்கையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை தமிழர்கள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

உரிய வருமானம் இல்லாததால் சத்தான உணவு சாப்பிட முடியாமல், வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை மக்கள் குறைத்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் சுமார் 60 லட்சம் பேர் உணவுப் பொருள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com