திடீரென கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த மக்கள்.. வீடியோ

மியாமி கடற்கரையில், திடீரென பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
திடீரென கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த மக்கள்.. வீடியோ
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மியாமி கடற்கரையில், திடீரென பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடலில் குளித்து கொண்டிருந்த மக்கள் இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

மியாமி கடற்கரை பகுதியில் மக்கள் ஜாலியாக பொழுதுபோக்கை கழிப்பது வழக்கம். அப்போது, திடிரென வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்ததை பார்த்து கடலில் குளித்து கொண்டிருந்தவரக்ள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மியாமி கடற்கரை போலீசார், ஹெலிகாப்டரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும், போலீசார் தரப்பில் இது குறித்து சொல்லப்பட்டது, ஹெலிகாப்டரில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். அதில், ஒருவர் அதிர்தவசமாக லேசான காயங்களுடன் தப்பினார். மற்ற இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர்.

ஹெலிகாப்டர் தண்ணீரில் விழுந்ததால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.. இதுவே தரையில் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com