“இன்னும் சில வருடங்களில் கல்லூரிகளே இருக்காது” - பகீர் கிளப்பும் AI -ன் காட்பாதர்..!

செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். சாத்தியங்கள் ...
hinton
hinton
Published on
Updated on
2 min read

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில்  மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பல நிறுவங்களில் மனிதர்களுக்கு மாற்றாகவே பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் -லிருந்து எலான் மஸ்க் பலரும் செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி பற்றியும் மனித குலத்தில் அது எத்தகைய மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது பற்றியும் பல முறை எச்சரித்துள்ளனர். ஆனாலும் இன்று பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை நுண்ணறிவுகளை சாரா துவங்கியுள்ளன. 

இந்த சூழலில் தான் செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் AI -ஆல் நிகழப்போகும் மிக மோசமான ஆபத்துகள் குறித்து பேசியுள்ளார்.

பலமுறை எச்சரித்த ஜெஃப்ரி ஹின்டன்

கடந்த 2023 -ஆம் ஆண்டே ஜெஃப்ரி ஹின்டன் கூகுலிலிருந்து விலகினார். அவர் அப்போது பதவி விலக்களுக்கு சொன்ன கரணம் பெரும் பேசுபொருளாக மாறியது. ஜாஃப்ரி ஹிண்டன் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு சிறு ஆராய்ச்சி தான் இன்று ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மாபெரும் வளச்சிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 

ஆனால் ஜாஃப்ரி ஹிண்டன் "செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். சாத்தியங்கள்இருப்பதால் தனது மனசாட்சி அதனை ஆதரிக்க மறுக்கிறது" என்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

அண்மைக்காலங்களில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஒரு சோதனையில் ஏ.ஐ. ஒன்று ஒரு சிறுகுழந்தையைப் போலவே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதாக கூறினார் அதனுடன் உரையாடிய ப்ளேக் லெமோயின்.ஒருவேளை AI -கள் முழுமையாக மனித உணர்வுகளை பெற பணிக்கப்பட்டால், அவற்றால் ஏற்படப்போகும் பேரழிவு நினைத்து பார்க்க முடியாதது .

மனிதர்கள் முக்கிய பங்கு வகிக்கும் எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அவர்களுக்கு மாற்றாக அமையும் அபாயம்  உள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த எல்லாம் ஆராய்ச்சிகளையும் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என தற்போது பொதுவில் ஒரு திட்டம் எழுந்தது, ஆனால் யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 

அதுமட்டுமின்றி தொடர் AI -ன் தாக்கம் தொழில்துறையை நிச்சயம் சீரழிக்கும். இதுவரை இந்த உலகம் பெரும்பாலும் மனித வளங்களை சார்ந்தே இயங்கியுள்ளது. ஒருவேளை AI எல்லாவற்றிலும் பெரும் மாற்று சக்தியாக வளர்ந்தால் மனித குளம் இதுவரை காணாத பேரழிவை குழுப்பதை சந்திக்க கூடும் என எச்சரித்து உள்ளார். ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அபரிமிதமான வேலை இழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. TCL -உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலையில் உள்ளது. மேலும் அந்த காலியிடங்கள் AI -ஆல் நிரப்பப்பட  உள்ளது. இவ்வாறாக  ஹிண்டன் எச்சரிக்கும் பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் அவர் சமீபத்தில் கூறிய சில கருத்துக்கள் உண்மையில் கவலை அளிக்கின்றன. “அடுத்த 10 ஆண்டுகளில் AI தொழில்நுட்பம் உங்கள் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், இதனால் உங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ கூட செல்ல தேவையில்லாத நிலை ஏற்படும், உலகின் மிகப்பெரும் பழமை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தங்கள் வேலையை இழக்கலாம், ஆசிரியர்களும் என்ஜினீர்களும் இல்லாமல் கூட போகலாம்” என பேசியுள்ளார்.

விளைவுகள் என்ன!

  • கற்றல் முறை நிச்சயம் மாறுபடும்.

  • மாணவர்கள் சுய கற்றலில் ஈடுபடுவது குறையும், AI முழுக்க முழுக்க சார்ந்திருப்பர் 

  • சார்பு தன்மை அதிகரிப்பதால் கற்பனைத்திறன், தனித்துவம் அனைத்தும் காணமல் போய்விடும் 

  • AI -எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் தேவைப்படலாம்.. இந்த இன்றியமையா தன்மய்யமால், அதிக ஆற்றல் கிடைக்கப்பெறலாம்.

  • நிச்சயம் வேலை வாய்ப்பு இழப்பு நேரிடும்.

  • மக்கள் தங்கள் துறைகளை மற்ற வேண்டிய சூழல் ஏற்படும், சில துறைகள் அழிந்தே போகும்.

  • பல பாரம்பரிய கல்வி நிறுவனங்கள் காணாமல் போகும்.

மெய்நிகர் ஆசிரியர்கள்

மெய்நிகர் ஆசிரியர்கள் என்பது மாணவர்களுடன் உரையாடலாக தொடர்பு கொள்ள NLP மற்றும் ML வழிமுறைகளைப் பயன்படுத்தும் AI ஆகும். அவை தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்குகின்றன. மெய்நிகர் ஆசிரியர்கள் தனிப்பட்ட மாணவர்களின் வேகம், பாணி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும், இதனால் கற்றல் செயல்முறை மிகவும் வேகமானதாக அமைந்தாலும், மாணவர் உணர்வுகளை அவற்றால் புரிந்துகொள்ள இயலாது. கடினமான பாடத்திட்ட மேம்பாட்டு செயல்முறையை AI,  சீர்குலைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.  இது ஏராளமான பாடத்திட்டப் பொருட்கள் மற்றும் கற்பித்தல் வளங்களை உறிஞ்சுகிறது. இதனால் தொழில் வளர்ச்சியும் நாம் ஏற்கனவே சொன்னது போல மனித வளமும் சீரழியும். ஆழமான கற்றல் நெட்வொர்க்குகள் பாடப்புத்தகங்கள், பாடத் திட்டங்கள், வினாடி வினாக்கள் மற்றும் பகுப்பாய்வுக்கான மதிப்பீடுகளிலிருந்து தரவைச் சேகரிப்பதால், மாணவர்கள் கற்றலை விரும்பாமல் போகலாம்.. பாடத்தின் ஆழம், சிரம சாய்வு, கற்பித்தல் முறைகள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகள் போன்ற முக்கிய கூறுகளை சிதைந்துபோகலாம்.. மாணவர்களின் கற்றல் திறன்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கக்கூடிய புதிய மற்றும் சூழல் ரீதியாக பொருத்தமான பாடத்திட்டத்தை உருவாக்க ஜெனரேட்டிவ் AI நாம் தகவலைதான் பயன்படுத்துகிறது. இதனால் மாணவர்கள் சிந்திக்காமல் கூட போகலாம்.

எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித குலத்தை பாதுக்காகவும் மேம்படுத்தவனும்தான் பய்னபடுத்த வேண்டுமே ஒழிய அதனை அழிக்க நாமே வழிவகுக்க கூடாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com