மாணவனுக்கு தடுப்பூசி செலுத்திய பள்ளி ஆசிரியர் கைது..

மாணவன் ஒருவருக்கு பள்ளி ஆசிரியர் எவ்வித சட்டப்பூர்வ மருத்துவ தகைமை இன்றி தடுப்பூசி அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவனுக்கு தடுப்பூசி செலுத்திய பள்ளி ஆசிரியர் கைது..
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் இயங்கி வரும் பாடசாலையில் பயின்று வரும் மாணவனுக்கு ஆசிரியர் தனது வீட்டில் வைத்து தடுப்பூசியை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும் லோரா ருசோ என்ற ஆசிரியரான இவர் மாணவனை அழைத்து சென்று அவரின் பெற்றோர்களிடம் உரிய அனுமதியினையும் பெறாமல்,தடுப்பூசி செலுத்துவதற்கான சட்டரீதியான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.

54 வயதான இவர் செய்த செயலுக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.புத்தாண்டு தினத்தன்று குற்றவாளியாக நிருபிக்கபட்டு நான்கு ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறு பரப்பரப்பு நிலவியதாக சொல்லப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com