அமெரிக்காவில் இடா சூறாவளியின் கோரதாண்டவத்துக்கு 44 பேர் பலி...

அமெரிக்காவில் இடா சூறாவளியின் கோரதாண்டவத்துக்கு 44 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் இடா சூறாவளியின் கோரதாண்டவத்துக்கு 44 பேர் பலி...
Published on
Updated on
1 min read

 அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 44 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் வீசிய இடா சூறாவளி காரணமாக அந்நகரமே உருக்குலைந்து போனது. இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் நியூயார்க் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சுரங்கங்களில் வெள்ள நீட் புகுந்துள்ளதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமான சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com