மதவழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் கவலை அளிக்கிறது - இந்தியா!

மதவழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் கவலை அளிக்கிறது - இந்தியா!
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினர் மத வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஓராண்டு நிறைவுபெற்றது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதால் அங்கு அசாதாரண நிலை நீடிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை அனுப்பி வைப்பு:

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ், அந்நாட்டுக்கு மனித நேய அடிப்படையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். உயிர் காக்கும் மருந்துகள், 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்பட 32 டன் மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுவரை 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

மதவழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள்:

தொடர்ந்து பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினரின் மதவழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரள வேண்டும் என்றார். தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் ஸ்திர தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com