"அரசு அறிவித்துள்ள Good News.." 3-வது குழந்தை பெற்று கொண்டால் ரூ. 10,000! அறிக்கை சொல்வது என்ன?

பிறக்கும் ஒவ்வொரு மூன்றாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளுக்கும், அக்குழந்தைக்கு மூன்று வயது ஆகும் வரை, மாதந்தோறும் 10,000 நுல்ட்ரம்
Bhutan Birth Rate Crisis
Bhutan Birth Rate CrisisBhutan Birth Rate Crisis
Published on
Updated on
1 min read

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடான பூட்டான், தனது மக்கள்தொகை குறைந்து வருவது குறித்து கவலை கொண்டுள்ளதுடன், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காகக் குடும்பங்களுக்குப் பண ஊக்கத் தொகையையும் அறிவித்துள்ளது.

கிழக்கு இமயமலைப் பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்துள்ள, 8 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட சிறிய நாடான பூட்டான், ஜூன் 4, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் ஒவ்வொரு மூன்றாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளுக்கும், அக்குழந்தைக்கு மூன்று வயது ஆகும் வரை, மாதந்தோறும் 10,000 நுல்ட்ரம் (சுமார் $105) ஊக்கத்தொகையாக வழங்கப்போவதாக அந்நாட்டு அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டாவது குழந்தைக்குப் பிறகு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அந்த குடும்பங்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சரவைச் செயலாளர் கேசாங் டெகி கூறியுள்ளார். “அவர்கள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு அல்லது ஏழு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பூட்டானின் மொத்த வருடாந்திர பிறப்புகள் 2015-ல் 11,001-ஆக இருந்ததிலிருந்து 2024-ல் 8,153-ஆக, அதாவது சுமார் 26% குறைந்துள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் கிட்டத்தட்ட 2.1 என்ற மாற்று நிலைக்குக் குறைந்துள்ளது என அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. குறைந்து வரும் மற்றும் வயதாகிவரும் மக்கள்தொகையும், வெளிக்குடியேற்றமும் பூட்டானின் தொழிலாளர் சக்தி, சமூகங்கள் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தால் சூழப்பட்ட பௌத்த இராச்சியத்தில் அதிகரித்து வரும் பொருளாதார அதிர்ப்தியால், இளம் பூட்டானிய மக்கள் வெளிநாடுகளில், குறிப்பாக ஆஸ்திரேலியாவில், வாய்ப்புகளை அதிகளவில் தேடி செல்வதாக கூறப்படுகிறது.

"இந்தப் புதிய கொள்கையானது, தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலனுக்கும், பூட்டான் மக்களின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது" என்று கூறப்படுகிறது. மேலும், அண்டை இந்திய மாநிலமான சிக்கிமும் 2023-ல், பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு, ஆண்களுக்கு ஒரு மாத தந்தைவழி விடுப்பு மற்றும் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருத்தரிக்க விரும்புவோருக்கான நிதியுதவி போன்ற சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com