இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஜோ பைடன் - சவுதி தலைவர்கள் சந்திப்பு!

இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஜோ பைடன் - சவுதி தலைவர்கள் சந்திப்பு!
Published on
Updated on
1 min read

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி வந்த பிடனை, ஜெட்டாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் வரவேற்றார். இந்த சந்திப்பில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அவர்களும் கலந்து கொண்டார் சவுதி அரேபிய தலைவர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை ஜெட்டா நகரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வந்த பிடனை, ஜெட்டாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் வரவேற்றார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​சவுதி அரேபியா மற்றும் அமேரிக்கா இடையேயான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் நலன்களுக்கு சேவை செய்ய அவற்றை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து மன்னர் சல்மான் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோர் ஆய்வு செய்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின்  இறுதியாக அவர் 
சவுதி அரேபியா வந்தார். கடந்த ஜூலை 13 ஆம் தேதி  தொடங்கிய இந்தப் பயணம், இன்றோடு முடிவடைகிறது. மேலும் இந்தப் பயணத்தில்  அமெரிக்க அதிபர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை ஆகிய பகுதிகளுக்கும் சென்றார். 

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஜோர்டான், எகிப்து மற்றும் ஈராக் தலைவர்களுடன்  ஒரு கூட்டு மாநாட்டிழும் ஜோ பைடென் கலந்து கொள்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com