
உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா. அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.
கியூபாவில் சே
ஃபிடல் காஸ்ட்ரோ தலைமியிலான கியூபா நாட்டின் புரட்சி இயக்கமான ஜூலை 26 இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். கியூப புரட்சி வெற்றி அடைந்த பிறகு அந்நாட்டின் அந்நாட்ட்டின் தொழில்துறை அமைச்சரானார். பிறகு பொலிவிய நாட்டுப் புரட்சிகர போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பொலிவிய நாட்டு இராணுவத்தால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
சே குவேரா மகன் கமீலோ
சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா. இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கமீலோ சேகுவாரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60 ஆகும். கமீலோ சேகுவாராவின் மறைவுக்கு கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.