ஒரே ஒரு சூயிங்கம் போதுமாம்...?கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கு...!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’சூயிங்கம்’ உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கிறது.
ஒரே ஒரு சூயிங்கம் போதுமாம்...?கொரோனா பரவலை  கட்டுபடுத்துவதற்கு...!
Published on
Updated on
2 min read

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’சூயிங்கம்’ உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கிறது.

உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழுவினர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் சூயிங் கம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தொடர்பான  ஆய்வறிக்கை மாலிகுலர் தெரபி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த சூயிங்கம், தாவரத்தில் உருவான புரோட்டினுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது உமிழ்நீரில் உள்ள வைரஸ் இருப்பை குறைத்து அதன் பரவலை தடுக்க உதவும் என  ஆய்வாளர் ஹென்றி கூறியிருந்தார்.

தொடர்ந்து ‘முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படலாம், அவர்கள் வைரசை மற்றவர்களுக்கு பரப்பலாம். இதை கட்டுப்படுத்த உதவும் வகையில் சூயிங்கம் உருவாக்கி உள்ளோம். பொதுவாக, கொரோனா வைரஸ் மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பிரதி எடுத்து பெருகுகிறது.

பொதுவாக, பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதும், இருமும் போதும் அல்லது பேசும் போதும் வைரஸ் வெளியேறி மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆனால், இந்த சூயிங்கம் உமிழ்நீரில் உள்ள வைரஸை டார்கெட் செய்து பரவலை கட்டுப்படுத்துகிறது.

மேலும் , மனித உடலில் சுவாச செல்களில் காணப்படும் ஏசிஇ2 புரோட்டினுடன் கொரோனா வைரசின் முள் பகுதிகள் ஒட்டிக் கொண்டு மனித உடலுக்குள் நுழைகின்றன. எனவே இந்த சூயிங்கம், ஏசிஇ2 புரோட்டினை கொரோனா வைரஸ் கரைக்க முடியாத படி வலுவாக்கி, உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கிறது.

எனவே ஏசிஇ 2 என்சைமை கொரோனா வைரஸ் கரைக்க முடியாத படி வலுவாக்கினால் மனித உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கலாம். எனவே, தாவரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஏசிஇ-2 என்சைம்களுடன் சூயிங்கம் உருவாக்கி உள்ளோம். ஏசிஇ2 புரதங்கள் உட்செலுத்தப்பட்ட சூயிங்கம்மால் வாய்வழி குழியில் உள்ள வைரசை செயலிழக்க செய்ய முடியும். 

இதனையடுத்து, ’மனிதர்களுக்கு இந்த சூயிங்கம் கொடுத்து பரிசோதனை வெற்றிகரமானால், கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களை பாதுகாப்பவர்களுக்கும் இத்தகைய சூயிங்கம் கொடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்’ என்று ஆய்வறிக்கையில் கூறியிருந்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com