விண்வெளியில் தங்களுக்கென ஒரு ஆய்வு மையம் அமைத்த சீனா: வெற்றிகரமாக பூமி திரும்பிய வீரர்கள்....

விண்வெளியில் தங்களுக்கென ஒரு ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 3 சீன வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
விண்வெளியில் தங்களுக்கென ஒரு ஆய்வு மையம் அமைத்த சீனா: வெற்றிகரமாக பூமி திரும்பிய வீரர்கள்....
Published on
Updated on
1 min read

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச அளவிலான ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதற்கு போட்டியாக சீனாவும் தனியாக ஒரு விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. பூமியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இம்மையத்தை கடந்த 3 மாதங்களாக 3 சீன வீரர்கள் அமைத்து வந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவர்கள் ஷெங்ஜூ என்ற விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.

 அவர்கள் வந்த விண்கலம் சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கும் காட்சிகளை சீன அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட விண்கலத்தில் இருந்த வீரர்கள் பூமிக்கு அருகில் வந்தவுடன் பாராசூட் மூலம் தரையிறங்குன்றனர்.

 பின்னர் அவர்களை தொழில்நுட்ப பணியாளர்கள் உரிய முறையில் பாராசூட்டிலிருந்து வெளியேற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து 3ஆவது நாடாக விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்பி வருகிறது. இதுவரை 13 சீனர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com