

சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அரசியலில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இந்தியா - சீனா இடையிலான உறவில் ஏற்பட்ட பெருவெடிப்பு மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வந்த சூழலில், 2024 அக்டோபரில் இரண்டு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டன.
வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS 2026) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் உயர்மட்ட தூதுக்குழுவுடன் இந்தியா வருகிறார். சுமார் 400 பேர் வரை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இறுதி செய்யும் பணிகளில் சீன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீனா பிரதமர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அரசியலில் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இறுதி செய்யும் பணிகளில் சீன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா பகுதிகளில் சீனா ராணுவம் மற்றும் குடியிறுப்புகளின் ஊடுருவல் பற்றி அதிகமாக விவாதங்கள் எழுந்து வருகின்றன. அருணாசல பிரதேசம் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவதும் பிரச்சனையாக எழுந்தது.
எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் சீனா சென்றுள்ளார். அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் துணை அதிபர் ஹான் செங் ஆகியோரைச் சந்தித்து, எல்லை அமைதி மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை சச்சரவுகள் படிப்படியாக தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக, டெல்லி - பெய்ஜிங் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முடங்கிக்கிடந்த வணிகச் செயல்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. · மானசரோவர் யாத்திரை மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனா சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டியான்ஜின் நகரில் நடந்த எஸ்சிஓ (SCO 2025) மாநாட்டின் போது சீன அதிபரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "நமது உறவு சரியான திசையில் நகர்கிறது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறவை வலுப்படுத்த உறுதியேற்றுள்ளோம். 280 கோடி மக்களின் நலன் இதில் அடங்கியுள்ளது" என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதேப்போல சீனா அதிபரின் வருகையும் சுமூகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BRICS என்பது இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பாக்கும். உலக அளவில் வணிக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேலை நாடுகளின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அமைப்பு.
கடந்த ஆண்டு சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றான நாணயத்தை உருவாக்க BRICS நாடுகள் முயலுவதாக தகவல் வெளியாகி, ட்ரம்ப்பின் கோபத்தை சம்பாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம், எல்லை அமைதி மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த இம்மாநாடுகள் முக்கிய தளமாக அமைகின்றன. இந்த மாநாடு இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்