குருத்வாராவில் புகைப்படம் எடுத்த மாடல் அழகியால் சர்ச்சை..!

மாடல் அழகிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்...!
குருத்வாராவில் புகைப்படம் எடுத்த மாடல்  அழகியால் சர்ச்சை..!
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இங்கு பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் உடைகளை விளம்பரம் செய்ய புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

பொதுவாக குருத்வாராவுக்குள் நுழையும் பெண்கள் தலைமை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பது மரபு. 
அதையும் மீறி தலைமுடி தெரியும் படி போஸ் கொடுத்துள்ள மாடல் அழகியின் புகைப்படம் வேகமாக 
பரவியதால், அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள 
அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவ்ரும் டில்லியில் உள்ள சீக்கிய குருத்வாராக்களை நிர்வகிக்கும் குழுவின் 
தலைவருமான மன்ஜிந்தர் சிங் சிர்சா, கருநானக் தேவின் புனித இடத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக 
நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதம் சார்ந்த இடத்தில் அவரால் 
இவ்வாறு நடந்துக் கொள்ள முடியுமா? எனவும், அவருக்கு அந்த துணிச்சல் உள்ளதா? என கேள்வி 
எழுப்பியுள்ளார். கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை ஒரு சுற்றுலா இடமாக மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த 
பிரதமர் இம்ரான் கான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com