சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. "முழு லாக்டவுன்".. அச்சம் அடையும் உலக நாடுகள்?

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், சில நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. "முழு லாக்டவுன்".. அச்சம் அடையும் உலக நாடுகள்?
Published on
Updated on
1 min read

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதுவரை மூன்று மற்றும் நான்காம் அலை பரவலை நாடுகள் சமாளித்து வருகின்றன.

தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை மூவாயிரத்து 393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு, முதல்நாள் பாதிப்பைவிட மூன்று மடங்கு அதிகம்.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி பதிவான கொரோனா பாதிப்பை காட்டிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு சீனாவின் சேங்சுன் என்ற பகுதியில் 90 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தொற்று பரவலால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் 19 நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சாங்காய் மற்றும் தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷான்சென் மாகாணத்தின் ஒன்பது மாவட்டங்களில் செயல்படும் உணவகங்கள்,  பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டன. இன்று முதல் 18ம் தேதி வரை ஊழியர்கள்  வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com