விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து பூமி திரும்பிய படக்குழு

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஷ்யப் படக்குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.
விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து பூமி திரும்பிய படக்குழு
Published on
Updated on
1 min read

பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ இயக்கி வரும் தி சேலஞ்ச் என்ற திரைப்படம் விண்வெளியில் நடப்பது போல் கதை அமைக்கப் பட்டுள்ளது. இதற்காக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்த படக்குழு, சர்வதேச விண்வெளி மையம் செல்ல தீர்மானித்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை யுலியா பெரெஸில்ட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப் ரோவ் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றனர். 

கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளிக்குச் சென்றனர். அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின், சோயூஸ் எம்எஸ் 18 விண்களம் மூலம் இன்று பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார். இவர்கள் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com