இலங்கை அதிபர் வீட்டில் கிடைத்த கோடிகள்; போராட்டக்காரர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு:

இலங்கை அதிபர் வீட்டில் கிடைத்த கோடிகள்; போராட்டக்காரர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு:

இலங்கை பிரதமர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பல கோடிகளைக் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on
தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை பொதுமக்கள், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது. நேற்று கைப்பற்றப்பட்ட அந்த மாளிகையில், போராட்டக்காரர்கள் ஒரு சிலர் தங்கி மாளிகைப் பொருட்களைப் பயன்படுத்தியும், அங்கு தங்கியும் வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் அங்குள்ள குளியல் அறை, நீச்சல் குளங்களில் குளித்து மகிழ்ந்ததுடன், உடற்பயிற்சி கூடத்தில் நுழைந்து உடற்பயிற்சி செய்தனர் போராட்டக்காரர்கள். குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலத்தை பார்வையிடுவது போல பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை அனுபவித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களாக சுற்றிப் பார்த்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை சுற்றிப் பார்க்கும் போது, அவரது ரகசிய அறை ஒன்றில், கட்டுக் கட்டாக பணம் அடுக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டுபிடித்த போராட்டக்காரர்கள், அதனை போட்டி போட்டுக் கொண்டு அள்ளி அவற்றை எண்ணி காவலர்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஒத்துக் கொண்டதாக நாடளுமன்ற சபாநாயகர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். இதனால் இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்த கூட்டாச்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜபக்சேவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் அமைதி காக்குமாறு அந்நாட்டு முப்படை தளபதி சுவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளனர். அமைதியான சூழலில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com