
அமெரிக்கா: ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவில் புலம் பெயர் வெளிநாட்டவர்களை ஒடுக்கும் விதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு சட்ட விரோதமாக வெளியேறிய இந்தியர்கள் பலரை கால்களில் சங்கிலியிட்டு ட்ரம்ப் அரசாங்கம் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்நிலையில்தான், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேரை கைது செய்திருக்கின்றனர்.
கைதை எதிர்த்து போராட்டம்
இந்த கைதை எதிர்த்து ஏராளமான மக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தொழில் பூங்காவுக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் உத்தரவிட்டிருந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, போலீசார், போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இவ்ரதை மோதலாக இருந்த இந்த விவகாரம் பின்னர் கலவரமாக வெடித்தது.
இதனால் வெகுண்டெழுந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர். கூட்டாகி கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதால் மக்கள் ஆத்திரத்தில் வீதிகளில் இருந்த கார்களுக்கு தீ வைக்க துவங்கினர். மேலும் போராட்டக்காரர்கள் அருகிலிருந்த தொழிற் பூங்காவிலும் தற்காலிகமாக போராடினர். மேலும் காலிபோர்னியா நெடுஞ்சாலையில் இருந்த கார்கள், மற்றும் கட்டிடங்கள் மீது கான்க்ரீட் கற்கள் மாற்றம் குப்பைகளை வீசி எறிந்தனர்.
ராணுவத்தை அனுப்பிய ட்ரம்ப்
குடியேற்ற மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. 1. 4 மில்லியன் மக்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் மிக தீவிரமடைந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தேசிய ராணுவ துருப்புக்களை அனுப்பி வைத்துள்ளார் . இச்செயல் மக்களை மேலும் கடுப்பேற்றியுள்ளது. இதனால் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது.
இந்த மோதலுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், ''பணம் வாங்கிக் கொண்டும் பிறரின் தூண்டுதலின் பேரிலும்நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது” என் அவர் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.