‘Dubai Summer Surprises’ தொடக்கம்.. 100+ பிராண்டுகளில் 90% வரை தள்ளுபடி! 12 மணி நேர சிறப்பு விற்பனை

நீங்கள் வாங்கும் பொருட்களின் ரசீதை SHARE செயலி மூலம் பதிவு செய்யவேண்டும்
Dubai Summer Surprises
Published on
Updated on
2 min read

துபாயில் இருக்கும் மக்களுக்கு ஒரு நற்செய்தி, இன்று ஜூலை 2, வியாழக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் முக்கிய மால்களில் 100-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 90 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் 'துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்' (DSS) என்ற நிகழ்வின் தொடக்க விழாவான இந்த ஆஃபர் சேல் உள்ளது. மஜித் அல் ஃபுதைம் நிறுவனத்தின் அனைத்து வணிக வளாகங்களிலும் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates), சிட்டி சென்டர் மிர்டிஃப் (City Centre Mirdif), சிட்டி சென்டர் டெய்ரா (City Centre Deira) ஆகிய மால்களில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. வேறு சில இடங்களும் பங்கேற்கின்றன, ஆனால் இன்றைய தினத்திற்கான உங்கள் முக்கிய இடங்கள் இந்த மூன்று இடங்கள் தான். 

இந்த சிறப்பு விற்பனையில் '90 சதவீதம் வரை' வாடிக்கையாளர்கள் வியக்கும் அம்சமாகும். மேலும் இந்த 90 சதவீத தள்ளுபடி இந்த சிறப்பு விற்பனை முடியும் வரை இருக்கும். ஃபேஷன் மற்றும் காலணிகள் பொதுவாக அதிக சலுகைகள் உள்ளது. அதே சமயம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கும் சலுகைகள் உள்ளது. 

இந்த சலுகைகளை கைப்பற்ற ஒரு சுவாரசியமான அம்சம் உள்ளது. இன்று மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப் அல்லது சிட்டி சென்டர் டெய்ராவில் உள்ள கடைகளில் நீங்கள் Dh300 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கினால், தள்ளுபடியை வெல்லும் குலுக்கல் பங்கேற்க வாய்ப்புள்ளது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற, நீங்கள் வாங்கும் பொருட்களின் ரசீதை SHARE செயலி மூலம் பதிவு செய்யவேண்டும், மேலும் உங்கள் ரசீதுகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

இன்றைய விற்பனை இந்த சீசனின் ஒரு தொடக்கம் மட்டுமே. "துபாய் கோடையை கொண்டாடுவோம்" என்ற பெயரில் நகரம் முழுவதும் 60 நாட்களுக்கு ஷாப்பிங், உணவு, இசை நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பத்தினருக்கான கொண்டாட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வரும் வாரங்களில், தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முதல் அழகு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மேலும் பல சிறப்பு தள்ளுபடி விற்பனை வார இறுதியில் வரிசையாக நடைபெற உள்ளன. ஷாப்பிங்கைத் தாண்டியும் பரிசுகள் உள்ளன. புதிய 'வின் யுவர் ஹோம் இன் துபாய்' குலுக்கல் மூலம் 12 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்றை வெல்லும் வாய்ப்பு, 'பீட் தி ஹீட்' இசை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான 'மோதேஷ் வேர்ல்ட்' ஆகியவை இதில் அடங்கும்.

இதில் உள்ள ஒரே சிக்கல் இன்றைய விற்பனை சரியாக இரவு 10 மணிக்கு முடிவடைகிறது. எனவே நீங்கள் வாங்கக் காத்திருக்கும் ஏதேனும் பொருள் இருந்தால், இன்று மாலை மாலுக்குச் செல்வது பயனுள்ளதாக இருக்கும். இதனை மிஸ் செய்யாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com