தைவானில் நிலநடுக்கம்!!!ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!!

தைவானில் நிலநடுக்கம்!!!ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!!
Published on
Updated on
1 min read

தைவான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது எனவும் ரயில் தடம் புரண்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்:

நாட்டின் வடப்பகுதியில் 50 கிலோமீட்டர் தொலைவில் பிற்பகல் 2:44 மணிக்கு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்த இருவர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நிலநடுக்கத்திற்கு பிறகு வெளிவந்த வீடியோவில் மக்கள் அவர்கள் உயிரைக் காப்பாற்ற கட்டிடத்திலிருந்து வெளியே ஓடி வருவதைக் காண முடிகிறது.

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை:

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் இருட்டுவதற்கு முன் நாட்டின் தெற்கு தீவான கியூஷூவை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com