
டெஸ்லா நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) தனது பெயரை மீண்டும் மாற்றியுள்ளார். இந்த முறை அவர் தனது பெயரை "Gorklon Rust" என்று மாற்றியுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று பலரும் யோசித்து வருகின்றனர். இதற்கு முன்பு, அவர் தனது பெயரை "Kekius Maximus" என்று மாற்றியதுடன், "Pepe the Frog" மீம் படத்தையும் தனது முகப்புப் படமாக வைத்திருந்தார். தற்போது, "Gorklon Rust" என்று மாற்றியிருப்பது பலவிதமான யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
எக்ஸ் பெயர் மாற காரணம் :
எலான் மஸ்க் ட்விட்டர் (Twitter) சமூக ஊடக தளத்தை வாங்கியதிலிருந்து பல மாற்றங்களை செய்து வருகிறார். அதில் மிக முக்கியமானது ட்விட்டர் என்ற பெயரை X என்று மாற்றியது. இந்த மாற்றம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் X என்ற எழுத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது பல நிறுவனங்களுக்கும் X என்ற பெயரை வைத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), எக்ஸ்.காம் (X.com) ஆகியவை அதில் சில உதாரணங்கள். X என்பது எதிர்காலத்தை குறிக்கும் ஒரு அடையாளமாக அவர் கருதுகிறார்.
தனது பெயரையே மாற்றி எலான் மஸ்க் :
எலான் மஸ்க், X தளத்தில் தனது பெயரை "Gorklon Rust" என்று மாற்றியுள்ளார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் ஏன் இப்படி செய்தார்? இந்த பெயர் எதைக் குறிக்கிறது? அவர் X தளத்தின் பரிந்துரை செய்யும் வழிமுறையை மாற்றியமைக்க உள்ளார். மேலும், Grok AI சாட்போட்டின் எளிய பதிப்பை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், அவர் பெயர் மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பெயருக்கு இது தான் அர்த்தமா?
"Gorklon Rust" என்ற பெயரில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது "Grok". இது எலான் மஸ்கின் xAI நிறுவனம் உருவாக்கிய AI சாட்போட்டின் பெயர். இரண்டாவது "Rust". இது ஒரு கம்ப்யூட்டர் நிரல் மொழி. இது xAI நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த பெயர் மாற்றம் அவரது AI முயற்சிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மேலும், "Gorklon Rust" என்பது Solana blockchain-ல் உள்ள ஒரு மீம் காயின் பெயராகும். இந்த மீம் காயின் PumpSwap, Raydium மற்றும் Meteora போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எலான் மஸ்க், X தளத்தின் பரிந்துரை செய்யும் வழிமுறையை மாற்றியமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. Grok AI சாட்போட்டின் எளிய பதிப்பை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். "லேசான பதிப்பு" மூலம் பயனர்கள் நல்ல அனுபவம் பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மதிப்பு இவ்வளவா?
இது எலான் மஸ்க் தனது பெயரை மாற்றுவது முதல் முறையல்ல. முன்னதாக, அவர் தனது X டிஸ்ப்ளே பெயரை "Kekius Maximus" என்று மாற்றினார். அப்போது "Pepe the Frog" மீம் படத்தை முகப்புப் படமாக வைத்தார். Kekius Maximus (KEKIUS) ஒரு கிரிப்டோகரன்சி ஆகும். இது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. டிசம்பர் 27, 2024 அன்று, KEKIUS-ன் விலை சுமார் $0.005667 ஆக இருந்தது. இது கடந்த 24 மணி நேரத்தில் 497.56% உயர்ந்துள்ளது. இதன் 24 மணி நேர வர்த்தக அளவு $2,734,948 ஆக இருந்தது. இது அதிகப்படியான சந்தை நடவடிக்கையையும், முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் காட்டுகிறது.
எலான் மஸ்க் அடிக்கடி தனது X டிஸ்ப்ளே பெயரை மாற்றுவது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு முறை அவர் பெயர் மாற்றும் போதும், அது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்புகிறது. அடுத்து எப்போது பெயரை மாற்றுவார்? என்ன பெயர் வைப்பார் என்பது பற்றிய யூகங்கள் இப்போதே சோஷியல் மீடியாவில் பரவ துவங்கி உள்ளது. அதோடு டுவிட்டரை, எக்ஸ் என பெயர் மாற்றியதையே இதுவரை பலரும் ஏற்கவில்லை. இந்த நிலையில் எலான் மஸ்க் தனது புரொஃபைல் பெயரை அடிக்கடி மாற்றி வருவது அவரை பின் தொடர்பவர்களையும், எக்ஸ் தள பயனாளர்களையும் குழப்பமடைய செய்யும் என சொல்லப்படுகிறது.