
அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டியில் நீர்வாழ் கேலரி சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏராளனமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
சுற்றுலா பயணிகள் அதிகம் வருகைத்தரும் நீர்வாழ் கேலரிக்கு பெண்குயின்களை பார்வையாளர்கள் கண்முன் வைக்க திட்டமிட்டனர்.இதில் பெண்குயின்களை வைப்பதற்கான ஏற்பாடுகளும் ஒருபுறம் செய்யப்பட்டு வந்துள்ளன.
இதனை தொடர்ந்து ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் இருந்து ஐந்து பெண்குயின்களை அகமதாபாத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவியல் நகரத்தில் உள்ள நீர்வாழ் கேலரிக்கு கொண்டுவரப்பட்டன.
இதனை தொடர்ந்து ஐந்து பெண்குயின்களை அவ்விடத்தில் வைத்த பின் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு மனிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பெண்குயின்களுக்காக இங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் அனைத்தும் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.