மாலத்தீவிலிருந்து வெளியேறினார் கோத்தபய ராஜபக்சே

மாலத்தீவிலிருந்து வெளியேறினார் கோத்தபய ராஜபக்சே
Published on
Updated on
1 min read

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல நாட்களாக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் போரட்டத்தினால் அங்கிருந்து தப்பித்து மாலத்தீவிற்குச் சென்றார் புகுந்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. அவர் எந்த நாட்டில் இறுதியாக அடைக்கலம் கோருகிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

சவூதி விமானச் சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சவூதி அரேபிய விமானச் சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் பயணிப்பதாக மாலத்தீவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com