

உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA நிறுவனத்தின் முன்னாள் CEO ஜென்சன் ஹுவாங் தொடர்பான சர்ச்சை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவருடன் இருந்த ரகசிய உறவு குறித்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தன பதிவியை ராஜினாமா செய்திருந்தார் ஜென்சன். மேலும் அந்த பெண் சீன உளவாளி என அடுத்தடுத்து வெளியான தகவல்களால் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். கடந்த நவம்பர் 12-ம் தேதி தனது CEO பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹுவாங்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியும் இருந்தது. இதற்கிடையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹுவாங் மீண்டும் Nvidia CEO பொறுப்புக்கு வருவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஹுவாங் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், Nvidia நிறுவனத்தின் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் ஹுவாங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை மீண்டும் CEO பதவியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி 'Stand With Jensen' என்ற பெயரில் ஆன்லைன் மனு ஒன்றும் தொடங்கப்பட்டது. இதில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தனக்கு கிடைத்து வரும் ஆதரவுகள் குறித்து ஜென்சன் ஹுவாங் முதல் முறையாக தனது எக்ஸ் (X) தளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு மனம் திறந்துள்ளார்.
தனது பதிவில், கடந்த ஒரு வாரமாக நண்பர்கள், தொழில்துறை சேர்ந்தவர்கள் மற்றும் இதுவரை சந்திக்காத பலரும் தனக்கு அன்பையும் ஆதரவையும் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் 53 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு வந்ததாகவும், அமெரிக்க குடிமகனாக மாறியது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். என்விடியா நிறுவனம்தான் தனது வாழ்நாள் பணி எனக் கூறியுள்ள அவர், சக ஊழியர்களுடன் இணைந்து நிறுவனத்தை இன்றைய நிலைக்கு வளர்த்தது தனக்குக் கிடைத்த பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைக்கும் அவர் பதிலளித்துள்ளார். "என்விடியாவில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்கப்படும் தரத்திற்கு நான் ஈடுகொடுக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான தவறுகளைச் செய்துள்ளேன். இதனால் நிர்வாகக் குழுவிற்கு சிக்கல்களை ஏற்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். எனது தவறுகளை முழுமையாக ஏற்றுகொள்கிறேன்.. மேலும், இயக்குநர் குழு மேற்கொள்ளும் சுதந்திரமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில், "என்விடியா ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே உருவாகக்கூடிய நிறுவனம். பங்குதாரர்கள், ஊழியர்கள், நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நலனுக்காக நான் மீண்டும் வருவது சிறந்தது என்று இயக்குநர் குழு முடிவு செய்தால், அவர்களின் அழைப்பை ஏற்று CEO பதவிக்குத் திரும்புவதில் நான் பெருமை கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பெரும் சர்ச்சைக்கு பிறகு, ஹுவாங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது தற்போது கவனம் பெற்றுள்ளது. மீண்டும் CEO பதவி ஏற்க அவர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், நிறுவனம் என்ன முடிவெடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் பெருகும் ஆதரவை பார்த்தால், அவர் பதவி ஏற்க அதிக வாய்ப்பு உள்ளது என்றே தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.