மீண்டும் கோலோச்சும் இடதுசாரிகள்! அமெரிக்கா முதல் பிரேசில் வரை.. வலதுசாரி அரசியலுக்கு முடிவுரை எழுதுகிறதா Gen Z?

மக்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சியின் மீது அதிருப்தி ஏற்படும்போது தானாகவே அவர்களின் பார்வை அடுத்த மாற்றதை நோக்கியும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் கட்சியின் மீதும் சென்று விடுகிறது.
rise of left-wing politics
rise of left-wing politics
Published on: 
Updated on: 
3 min read

கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளிலும் சரி அமெரிக்காவிலும் சரி மக்கள் இடதுசாரிகளுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர். வலதுசாரிகளுக்கு வாக்களித்து வந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உட்பட பல பிரச்சனைகளால் மக்கள் அவதியுற்ற நிலையில் போராட்டங்கள் பல வெடித்தன. தற்போது வருகின்ற தேர்தல்களில் மக்களின் எண்ணம் வேறாக மாறி இருப்பது தெளிவாக தெரிகிறது. தற்போது மீண்டும் உலகளவில் மக்களின் பார்வை இடதுசாரிகளை நோக்கி திரும்பியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வலதுசாரிகள் சித்தாந்தம், பழமைவாத அரசியல், அந்நியர்களின் குடியேற்ற எதிர்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. மேலும், இது மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற பாணியில் ட்ரம்ப் இதனை மேற்கொண்டார். இது அனைவரையும் ஈர்த்து மக்களின் ஆதரவினை பெற்றாலும், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, பணவீக்கம், போர், விலைவாசி உயர்வு போன்றவையும் கூட மறுபக்கத்தில் தலைதூக்க வைத்தது. இதன் தாக்கமே மக்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்க தொடங்கியது என்று கூறப்படுகிறது. தங்களது தேவைகள், தங்களின் வாழ்க்கை போன்றவற்றை மீண்டும் சீரமைக்க மக்கள் வீதிக்கு வர தொடங்கினர்.

ஐரோப்பிய நகரங்கள் எங்கும் இளைஞர்களின் போராட்டத்தால் பற்றியெரிய தொடங்கியது. ஆளும் அதிகார வர்க்கத்தினை எதிர்த்து தங்களது கோரிகளைகளை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரான்சில், மாணவர்கள் சிறந்த பணிச்சூழல், கூடுதல் ஆசிரியர்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை மேற்கொண்டனர். ஐரோப்பாவின் இந்த போராட்டம் அதிகாரத்தை ஆட்டம் காண செய்தது. விலைவாசி உயர்வு, பாலஸ்தீன விவகாரம், போருக்கு அதிக பணத்தினை செலவழித்தல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல காரணங்களும் இதில் அடங்கும்.

இது ஒருபுறம் நடக்க அமெரிக்காவில் ட்ரம்பின் ஆட்சி முறையை எதிர்த்தும், அவரது செயல்பாடுகளை எதிர்த்தும் அதிருப்தியடைந்த மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தது. விலைவாசி உயர்வு, இறக்குமதி வரிகள், குடியேற்றக் கொள்கை, ஈரான் போர், மற்றும் ஜனநாயக அதிகாரங்கள் குறித்த அச்சம் ஆகியவை இதில் அடங்கும். இவைதான் “No Kings” என்ற பெரிய எதிர்ப்புப் பேரணிகளாக வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

protest
protest

இதுமட்டுமின்றி, இந்தியர்கள் பலரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். ஆனாலும் கூட பிறநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ட்ரம்ப் ஈடுபட்டது அவர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதில் இந்தியர்கள் மட்டுமின்றி பல நாடுகளை சேர்ந்தவர்களும் கூட அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஆனால் விசாவிற்கான தொகையை அதிகப்படுத்துவது, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவது போன்ற செயல்பாடுகளால் ட்ரம்ப் அந்த மக்கள் மத்தியில் அதிருப்தியை சந்தித்தார்.

அதுபோன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மாற்று கோணத்தில் இருந்து பிரச்சனையை அணுக துவங்கியுள்ளனர். அதாவது இளைஞர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி முற்போக்கு அரசியல் அதாவது இடதுசாரி அரசியலை நோக்கி நகரத் துவங்கியுள்ளனர். 2024 அன்று பிரேசில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிய மக்கள் முன்னணி (NFP) என்ற இடதுசாரி கூட்டணியை 182 இடங்களில் வெற்றிபெற செய்தனர். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிரேசில் நாட்டின் தேர்தல் முடிவுகளில் கூட இது பிரதிபலித்திருந்தது. இந்த தேர்தலில் லூலா டா சில்வா மீண்டும் ஆட்சியை பிடித்தார். இது அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில், லூலா-வின் அரசியல் வருகை என்பது அவரது மறுவருகையாக மட்டுமே பார்க்கமுடியாது. இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மக்கள் மாற்றத்தை விரும்பியதால் இது நிகழ்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வறுமை, சமூகப்பாதுகாப்பு, பொருளாதார சமத்துவம் போன்றவற்றையே மக்கள் பெற விரும்புகின்றனர். மக்கள் தங்களுக்கென்ற சமூகப்பாதுகாப்பினை எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியாக நிலையான ஓர் இடத்தினை பெற விரும்புகிறார்கள்.

Lula da Silva
Lula da Silva

அடுத்து, இஸ்ரயேலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது கூட்டணியும் பெரும்பான்மையை இழந்த அதே வேளையில், அரபு தலைமையிலான கட்சிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இஸ்ரேலை பொறுத்தவரை நாம், மற்ற நாடுகளை அணுகுவதுபோன்று அணுகமுடியாது. ஏனெனில், அங்கு பாலஸ்தீன விவகாரம், குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட சவால்கள் இருப்பதால் மக்கள் இடதுசாரிகளை நோக்கி செல்வது என்பது அரிது. ஆனாலும், நெதன்யாகு தோல்வியை தழுவி இருப்பது என்பது, மக்கள் அரசியல் பாதுகாப்பு மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சனைகளையும் குறித்து கவலையடைய தொடங்கியது முக்கிய காரணியாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

அடுக்கடுக்கான நெருக்கடிகளால் மக்கள் இடதுசாரிகளை நோக்கி செல்கிறீர்களா? என்று கேட்டால் ஆம். உலகளவில் நடைபெறும் போரால், அதிகளவில் பாதிப்பிற்குள்ளானது சாமானிய மக்கள்தான். பெருமுதலாளிகளின் பணம் வளர்ந்தாலும், அவர்களது பணம் குறையும் தருவாயில் இருந்தாலும் கூட விலைவாசி உயர்வாக அது மாறி மக்களின் தலையில் வந்து விழும் நிலைக்கு வந்துவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஓரிடத்தில் குவியும் பணம், இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாமானியர்கள் திக்குமுக்காடி போய் நிற்கிறார்கள். அடுத்து, மக்கள் கொள்கைகளை பார்த்துதான் வாக்களிப்பார்களா? என்று கேட்டால், முழுமையிலாக ஆம் என்று கூறிவிட முடியாது. மக்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சியின் மீது அதிருப்தி ஏற்படும்போது தானாகவே அவர்களின் பார்வை அடுத்த மாற்றதை நோக்கியும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் கட்சியின் மீதும் சென்று விடுகிறது.

அடுத்து இளைஞர்கள், தற்போது இவர்கள் அரசியலை தீர்மானிக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். வேலை பாதுகாப்பு, மாணவர்களின் கல்விக்கடன், சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி அவர்களின் அரசியல் பார்வை நகர்கிறது. அந்த வகையில் பார்க்கும் போது இடதுசாரிகளின் மக்களின் உரிமைகளை பற்றி பேசுவது இளைஞர்களை ஈர்ப்பதாக இருக்கிறது.

இந்த இடதுசாரிகளின் எழுச்சியை வெறும் அரசியல் போக்காக மட்டும் பார்க்கமுடியாது. அது சமீபத்திய ஆட்சியாளர்களின் பொருளாதார கட்டமைப்பு, பழைமைவாத சிந்தனை போன்ற காரணிகளின் மீதான அதிர்ப்தியே மக்கள் மாற்று அரசியலை கையில் எடுக்க காரணமானது. குறிப்பாக அமெரிக்காவில் முற்போக்கு அரசியல் எழுச்சி, பிரான்ஸின் இடதுசாரிக் கூட்டணியின் தேர்தல் வெற்றி, பிரேசிலில் லூலாவின் அரசியல் வருகை என ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாற்றத்திற்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான் என்பதை இந்த முடிவுகள் சொல்லாமல் சொல்லியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது இளைஞர்கள் அடுத்த அத்தியாயத்தை எழுத தொடங்கி விட்டார்களா? என்ற கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.