ஈரானை தொடர்ந்து லெபனானை தாக்கியது இஸ்ரேல்! தலைநகரில் தரைமட்டமான குடியிருப்புகள்.. நள்ளிரவில் 6 பேர் கொல்லப்பட்டதன் காரணம்?

மார்ச் 2 நடந்த இஸ்ரேலின் தாக்குதலில் 912 பேர் உயிரிழந்ததாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
ஈரானை தொடர்ந்து லெபனானை தாக்கியது இஸ்ரேல்! தலைநகரில் தரைமட்டமான குடியிருப்புகள்.. நள்ளிரவில் 6 பேர் கொல்லப்பட்டதன் காரணம்?
Published on
Updated on
2 min read

கடந்த இரண்டு வாரங்களாக லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்தி வரும் பெரிய அளவிலான மற்றும் தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இந்த பெய்ரூட் தலைநகர் தாக்குதல் நடந்துள்ளது.

பெய்ரூட் லெபனானின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும்.  லெபனான் முழுவதும் தொடரும் போர் தாக்குதல் தீவிரமடைந்து தற்போது தலைநகரமனா  மத்திய பெய்ரூட் இல் உள்ள கட்டிடம் குறிவைக்க பட்டு தகர்க்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் இந்த கட்டிடம் சில நொடிகளில் தரைமட்டமானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரல் ஆகியுள்ளது.

நள்ளிரவு நடந்த இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும்  மேலும் 12 பேர் படுகாயமடைந்ததாகவும்  லெபனான் சுகராதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்று குடியிருப்பு கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. இந்த வான்வழி தாக்குதல் குறித்து குடியிருப்பாளர்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தாக்குதலுக்கு சுமார் 90 நிமிடங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர்களின் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த செய்தியில் மக்களை அந்த இடத்திலிருந்து குறைந்தபட்சம் 300 மீட்டர் தொலைவிற்கு விலகிச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலால் ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து லெபனானைவிலும் இஸ்ரேல் தந்து தாக்குதலை தொடங்கியது. ஹிஸ்புல்லா என்பது லெபனானை தளமாகக் கொண்டு இயங்கும், ஈரானின் ஆதரவு பெற்ற, ஷியா முஸ்லிம் அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும். ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், இந்தத் தாக்குதல்கள் தலைநகரின் மையப்பகுதியை குறிவைத்துள்ளது. பின்னர், அதிகாலை 5.30 மணியளவில் , பெய்ரூட்டின் நகர மையத்திற்கு அருகில் அமைந்துள்ள பச்சௌரா பகுதியில், மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பு ஒரு முழு கட்டிடத்தையும் தகர்த்தது. 

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழு இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது. அதையடுத்து, மார்ச் 2 அன்று லெபனான் மேற்கு ஆசிய போரில் இழுக்கப்பட்டது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முன்னறிவிப்புடனும் முன்னறிவிப்பின்றி யும் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளது. மார்ச் 16 அன்று ஹிஸ்புல்லா தளங்கள் மீது குறிவைத்து தாக்கபட்டுள்ளது. ஹிஸ்புல்லா படையும் அதற்க்கு எதிர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் மார்ச் 2 நடந்த இஸ்ரேலின் தாக்குதலில் 912 பேர் உயிரிழந்ததாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024-ல் ஹிஸ்புல்லாவுடனான போரின்போது இஸ்ரேல் தாக்கிய மற்றொரு அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியான மத்திய பஸ்தா மாவட்டத்தில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை மேலும் இரண்டு தாக்குதல்கள் குறிவைத்ததாக என்.என்.ஏ. கூறியது. பாஸ்டாவில், அருகருகே உள்ள இரண்டு மாடிகளில் குடியிருப்புகளின் சுவர்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் மத்திய பெய்ரூட்டின் பஷூரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்தது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com