“தற்காப்புக்காக” - ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்..! மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்!

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. இந்த தாக்குதலை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட..
isrel attcked iran
isrel attcked iran
Published on
Updated on
1 min read

எங்கே ஈரான் அணு ஆயுதத்தை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் தான் இப்படி ஒரு திடீர் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

தெஹ்ரானில் நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் The Rising Lion என்ற ஆபரேஷனை முன்னெடுத்துள்ளது. ஈரானின் முக்கிய நகரங்களை குறிவைத்து குறிப்பாக அணு ஆயுத தளவாடங்களை நோக்கி இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு வந்தேறிகளாக வந்த இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பகுதியை கைப்பற்றியது. palestine liberation organisation இஸ்ரேலின் இந்த எதேச்சதிகார போக்கை எதிர்த்து போராட துவங்கியது, அதிலிருந்து பாலஸ்தீனத்தில் பதற்றம் நிலவி வந்தது, தற்போது கடந்த 2 ஆண்டுகளாக பாலஸ்தீனம் முழுவதும் சிதைக்கப்பட்டு, பாலஸ்தீனிய மக்கள் மீது கட்டுக்கடங்காத ராணுவ நடவடிக்கை கட்டவிழ்க்கப்பது.

இந்த சூழலில் மீண்டும் ஈரான் நாட்டின்மீது தாக்குதலை துவங்கியுள்ளது. இஸ்ரேல்.

ஈரான் பதிலடி!

இதற்கிடையே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. இந்த தாக்குதலை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட ட்ரோன் விமானங்களை ஈரான் ஏவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது.

தற்காப்புக்காக..

The Rising Lion -இஸ்ரேலிகள் உயிர் வாழவும், ஈரானின் அச்சுறுத்தலை தகர்க்கவும் இதை செய்துள்ளளோம், இப்பொது நாங்கள் இந்த நடவடிக்கையாயி மேற்கொள்ளாவிட்டால் எங்களால் இங்கு இருக்க முடியாது” -என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு பேசியுள்ளார்.

தன்னிச்சையான..

இந்த தாக்குதலில் ஈரானின் முப்படை தளபதி  முகமது பசேரி உயிரிழந்துள்ளார். எப்போதும் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் அமெரிக்க தற்போது “இது இஸ்ரேலின் தன்னிச்சையான நடவடிக்கை” என கருத்து கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஜப்பான், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் போக்கு நிச்சயம் மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com