“இப்படியே போச்சுன்னா நாம அவ்ளோதான்” - இஸ்ரேல் - ஈரான் போரால் இந்தியாவுக்கு விழப்போகும் அடி..!

ஞாயிற்றுக்கிழமை ஈரானில் மூன்று அணுசக்தி தளங்கள் மீதுஅமெரிக்க வான் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ...
isrel iran war
isrel iran war
Published on
Updated on
2 min read

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு வந்தேறிகளாக வந்த இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பகுதியை கைப்பற்றியது. palestine liberation organisation இஸ்ரேலின் இந்த எதேச்சதிகார போக்கை எதிர்த்து போராட துவங்கியது, அதிலிருந்து பாலஸ்தீனத்தில் பதற்றம் நிலவி வந்தது, தற்போது கடந்த 2 ஆண்டுகளாக பாலஸ்தீனம் முழுவதும் சிதைக்கப்பட்டு, பாலஸ்தீனிய மக்கள் மீது கட்டுக்கடங்காத ராணுவ நடவடிக்கை கட்டவிழ்க்கப்பது. இந்த  ஈரான்  பத்து நாட்களுக்கு  நடத்தி வருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரானும்  பதிலடி தந்து வருகிறது.. இந்த தாக்குதலை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட ட்ரோன் விமானங்களை ஈரான் ஏவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது.

ரானின் அணு‑மையங்களான Fordow, Natanz, Isfahan ஆகியவை இஸ்ரேலையும் அமெரிக்காவும் போர்வழியாக தாக்கியவை; இதன் விளைவாக அதிகளவிலான விமானத் தாக்குதல்கள்  நிகழ்ந்துள்ளது. 

நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறாமலே ஈரானின் அணு ஆயுத தளங்களை ட்ரம்ப் அரசாங்கம் தாக்க துவங்கி இருக்கிறது.

இந்த  போரின் விளைவால் கச்சா எண்ணெய் -ன் உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் மூன்று அணுசக்தி தளங்கள் மீதுஅமெரிக்க வான் படைகள்  தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் பொருளாதார தட்டுப்பாடு!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், அது இந்திய வர்த்தகத்தை பெருமளவில்  சீர்குலைத்து, எண்ணெய் விலைகளை அதிகரிக்கும்.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி  ஈரானின் ஒரு முக்கிய கடல் வழி நீர் வழிப்பாதையாகும். மத்திய கிழக்கில் இருந்து ஆசிய நாடுகளை இணைக்கும் அதிமுக்கிய வழித்தடம் இதுதான். இது மொத்தம் 21 மைல்கள் அதாவது 34 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இதன் வடக்கே ஈரானும், தெற்கே ஓமன், ஐக்கிய அரபு அமீரகமும்அமைந்துள்ளது. . பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா, அரபி கடலுடன் இணைக்கும் பகுதியாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது.

இதன் வழியாக தான் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் -ஐ பெறுகின்றன.  நம் நாட்டை எடுத்து கொண்டால் மொத்த கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். மே மாதத்தில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 47 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால்  மத்திய கிழக்கு  நாடுகளிடம் இருந்து வரும் கச்சா எண்ணெய் வாங்கி உபயோகிக்கும் இந்தியாவால் இந்த பொருளாதார சிக்கலை சமாளிப்பது மிகக்கடினம்.  ஹார்முஸ் ஜலசந்தி தான் சரக்கு கப்பல்கள் வரும் ஒரே வழித்தடம். தற்போது அதனை ஈரான் மூடினால் ஈராக், அவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் கிடைக்காது. அதேபோல் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கிடைக்காது. இதனால் கச்ச எண்ணையின் தட்டப்படு அதிகரிக்கும். ரஷ்யா உள்பட பிற நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தலாம். இது நேரடியாக பெட்ரோல் டீசல் விலையை அதிகரிக்கும். அதன்மூலம் பிற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் தற்போது எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com