Ponytails ஜடை ஆபாசத்தை தூண்டுகிறதா..? இந்த ஸ்டைலுக்கு இனிமேல் தடையா... எங்கு தெரியுமா..?

பள்ளி மாணவிகள் குதிரை வால் வகை ஜடையை அலங்கரித்து  வருவது ஆபாசத்தை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, ஜப்பான் தனது நாட்டிலுள்ள பள்ளிகளில் தடைசெய்துள்ளது.
Ponytails  ஜடை ஆபாசத்தை தூண்டுகிறதா..? இந்த ஸ்டைலுக்கு இனிமேல் தடையா... எங்கு தெரியுமா..?
Published on
Updated on
1 min read

பொதுவாக தற்போது உள்ள சூழலில் Ponytails வகையான சிகை அலங்காரத்தை தான் பெண்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். ஆனால் ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் அதாவது Ponytails வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. 

என்ன காரணம் என்று பார்த்தால், குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது. என்னதான் ஜப்பான் புது புது விதிகளை ஏற்படுத்தி வந்தாலும் கண்டுக்கொள்ளாமல் சென்ற ஜப்பானிய மக்கள்,  இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சையையே கிளப்பியுள்ளார்கள்  என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இதுகுறித்து கூறிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர் மோடோகி சுகியாமா, நான் எப்போதும் இதுபோன்ற விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விதிகளுக்கு போதுமான எதிர்ப்பு இல்லாததாலும் இது போன்ற விதிகள் சாதாரணமாகிவிட்டதாலும் மாணவிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

மேலும் ஒரு சிலர் இந்த தடை பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை தவறாக திருப்பும் விதமான பின்னோக்கு சிந்தனை என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com