காற்றடைத்து பயன்படுத்தும் ஸ்கூட்டரை உருவாக்கிய ஜப்பான்!!

சிறிய அளவிலான ஸ்கூட்டர் வகைகளை காற்றடைத்து பயன்படுத்தும் வகையில் ஜப்பானியர் உருவாக்கியுள்ளனர். 
 காற்றடைத்து பயன்படுத்தும் ஸ்கூட்டரை உருவாக்கிய ஜப்பான்!!
Published on
Updated on
1 min read

பொய்மோ (POIMO) என இந்த வகையான ஸ்கூட்டருக்கு பெயர் வைத்துள்ளனர்.இதனை டோக்கியோ பழ்கலைகழகத்தின் பேராசிரியரான ஹிரோகி சட்டோ என்பவர் உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.

சூட்கேஸ் அளவிற்கு உள்ள இந்த எலட்ரிக் ஸ்கூட்டரை எளிதாக எங்கு சென்றாலும் கைகளிலேயே தூக்கி செல்லும் அளவிற்கு உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை யார் வேண்டுமானலும் இயக்கும் அளவிற்கு வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேவைபட்டால் இதனை பலூனிற்கு காற்றடைப்பது போல காற்றடைத்து  பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com