அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்!!!

அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்!!!
Published on
Updated on
2 min read

அமைதிக்கான நோபல் பரிசு 2022 தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியாளர்கள்:

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸின் மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பிலியாட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அலெஸ் பிலியாட்ஸ்கியைத் தவிர, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பின் நினைவுச்சின்னம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு மையம் ஆகியவைகளும் இந்த விருதைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் மனித உரிமைகளுக்காக செயல்பட்டு வருகின்றன.

யார் இந்த ஆலிஸ் பிலியாட்ஸ்கி?:
  
பெலாரஸின் சர்வாதிகாரத்திற்கு எதிராக 1980 இல் ஜனநாயக இயக்கத்தைத் தொடங்கினார் பிலியாட்ஸ்கி . இன்றுவரை, அவரது நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ ரஷ்யா-உக்ரைன் போரில் விளாடிமிர் புதினுக்கு ஆதரவாக இருக்கும் கடுமையான சர்வாதிகாரியாகக் கருதப்படுகிறார்.

சிறையில் இருக்கும் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக விசானா என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார் பிலியாட்ஸ்கி. பிலியாட்ஸ்கி 2011 முதல் 2014 வரை சிறையில் இருந்துள்ளார். அவர் 2020 இல் மீண்டும் கைது செய்யப்பட்டு இன்றளவும் சிறையில் இருக்கிறார். 

என்ன குற்றச்சாட்டு?:

வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பிலியாட்ஸ்கி  ஜூலை 14, 2021 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாவலர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருதுகின்றனர். 

மனித உரிமைகள் அமைப்பின் நினைவகம்:

ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பின் நினைவகம் 1987 ஆம் ஆண்டு சோவியத் பிரிவினை காலத்தில் கட்டப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆண்ட்ரி சகாரோவ் மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் ஸ்வெட்லானா கணுஷ்கினா ஆகியோர் அடங்குவர்.

90 களில் சோவியத் யூனியன் 15 பகுதிகளாக சிதைந்த பிறகு இது ரஷ்யாவின் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பாக மாறியது. ஸ்டாலின் காலம் முதல் இன்று வரை அரசியல் கைதிகளுக்காக குரல் எழுப்பி வருகிறது. 2009ல் செச்சினியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோதும், இந்த அமைப்பின் நடாலியா எஸ்டெமிரோவா கொல்லப்பட்டபோதும், இந்த அமைப்பு எழுப்பிய குரல் உலகளவில் பேசப்பட்டது. ரஷ்ய அரசாங்கம் இந்த அமைப்பை வெளிநாட்டு உளவாளிகளின் அமைப்பு என்று குற்றஞ்சாட்டுகிறது.

சிவில் உரிமைகள் மையம்:

உக்ரைனின் தலைநகரான கியேவில் 2007 ஆம் ஆண்டு சிவில் உரிமைகளுக்கான மையம் உருவாக்கப்பட்டது. உக்ரைனில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே இதன் ஒரே நோக்கம். உக்ரைனில் உண்மையான ஜனநாயகம் இன்னும் இல்லை என்று இந்த அமைப்பு கூறி வருகிறது.  இந்த ஆண்டு பிப்ரவரியில், ரஷ்யா உக்ரைனைத் தாக்கியபோது, ​​இந்த அமைப்பு போர்க்குற்ற வழக்குகளை விசாரித்தது. இப்போது இந்த வழக்குகள் சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com