மிக அரிதான சூரிய கிரகணம்… “6 நிமிடம் காரிருளில் மூழ்கப்போகும் உலகம்..!!

1991-ஆம் வருடத்திலிருந்து 2014 வரை நிலவிய மிக நீண்ட “முழு சூரிய கிரகணங்கள்” களில் ...
longest solar eclips
longest solar eclips
Published on
Updated on
1 min read

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, சூரியனின் ஒளி பூமியை வந்து சேராமல் இச்செயலால்  தடுக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாட்டில் சூரிய கிரகணம் குறித்து பல கட்டுக்கதைகள் பல காலமாக உள்ளன.

ஆனால் உண்மையில் சூரிய கிரகணம் எதனால் நிகழ்கிறது? 2027 -ல் வரப்போகும் இந்த நீண்ட சூரியகிரகணத்தால் எந்த நாடுகள் எல்லாம் இருளில் முழக்கப்போகிறது? என்பதை இக்கட்டுரையில் காண்போம்..

சூரியன், நிலவு, பூமி என்ற வரிசையில் நிலவு நேர்கோட்டில் வந்து சூரியனை மறைக்கும் போது, குறிப்பிட்ட பூமியின் பகுதி இருளில் மூழ்கும் . 

நிலவின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையுடன் சுமார் 5° சாய்வு உள்ளது. அதனால், அமாவாசை வாரத்தில் கிரகணம் நடக்காது. இதன் காரணமாகத்தான்  இரண்டு "கிரகண பருவங்கள்" ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் ஏற்படுகின்றன.

உலகம் 100 ஆண்டுகளுக்கு  ஒருமுறை ஏற்படும் மிக நீளமான சூரிய கிரகணத்தை வருகிற ஆகஸ்ட் 2 - 2027 -ல்  பார்க்க உள்ளது.ட்ராண்டிக் கடலில் துவங்கி  வட ஆப்பிரிக்கா, எகிப்து, மத்திய கிழக்கு, யமன் ஓரிஎண்ட் ஆஃப் அபரேஜா  ஆகிய பகுதிகளில் இந்த கிரகணம் பயணிகள் உள்ளது. 

இந்த கிரகணம் 6 நிமிடம் 23 விநாடிகள் வரை நீடிக்கும் – இது 1991-ஆம் வருடத்திலிருந்து 2014 வரை நிலவிய மிக நீண்ட “முழு சூரிய கிரகணங்கள்” களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு ஏழு பிராந்திய நாடுகளிலும், சுமார் 8.9 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் காணப் பெறும் மிகப் பெரும் வானியல் சம்பவமாக கருதப்படுகிறது. 2027–இல் இது “ஒரு நூற்றாண்டின் நீண்ட கிரகணம்” என வருணிக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com