பட்டினிச் சாவை உருவாக்கிய இஸ்ரேல்..! ஆபத்தான சூழலில் 9,000 குழந்தைகள்..! கதறி அழும் காசா..!
2023 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் பாலத்தீன போர் மிக தீவிரமடைந்து வருகிறது. பாலத்தீனியர்கள் அதிகம் வாழும் காசா பகுதி முழுவதையும் இஸ்ரேலிய துருப்புகள் சுற்றி வளைத்து பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஹமாஸுக்கு எதிரான இந்த தாக்குதலில் பல லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார். பலமுறை போர் நிறுத்தம் அறிவித்தும் இஸ்ரேல் அதையே எல்லாம் கண்டுகொள்ளாமல் பாலஸ்தீனிய அரேபியர்கள் மீது மத ரீதியிலான இனப்படுகொலையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவ முகாம்கள் மருத்துவமனைகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. 73 நாட்களுக்கு மேல், இஸ்ரேல் காசாவிற்குள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் செல்வதை தடுத்து வருகிறது. இஸ்ரேல் காசாவிற்குள் மனிதனால் உருவாக்கப்பட்ட’பட்டினி சாவை” கொண்டு வந்திருக்கிறது.
காசா பகுதியின் பாதிப்புகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு நிலை மதிப்பீடு (IPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி, காசா பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்போதிலிருந்து செப்டெம்பர் மாதத்திற்குள்ள இந்த நெருக்கடி நிலை இன்னும் தீவிரமடையலாம் என எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) தரவுகளின்படி, மார்ச் 2 அன்று இஸ்ரேல் முழுமையான தடையை விதித்த பிறகு, குறைந்தது 57 குழந்தைகள் பசிக்கொடுமையால் இறந்துள்ளனர். ‘பசியை ஏற்படுத்தி கோலை’ செய்வது என்பது உணவு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல இது உடல் மற்றும் உளவியல் நிலைகளை மோசமாக சோதிக்கிறது. இந்த கொடூர விளைவை அனுபவிப்பவர்கள் காசா -வின் குழந்தைகளாக இருக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் அடிப்படையில் 9,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் தற்போது முதல் மார்ச் 2026 வரை, ஐந்து வயதுக்குட்பட்ட 71,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிர பசி பட்டினியால் பாதிக்கப்படுவார்கள், அதில் 14,100 குழந்தைகள் மோசமான விளைவுகளை சந்திக்க கூடும், மேலும் கர்ப்பவதிகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்தித்து வருகின்றனர். 17,000 பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது” - என IPC தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்