``தலைநகரிலேயே குண்டு போட தயாரா?" 'Dirty Bomb' என்பது என்ன.. அமெரிக்கா - ஈரான் போரின் அடுத்தகட்டமா?

"ஊடகங்களுக்கு உளவு தகவல் வழங்கும் சில பொய்யர்கள். மேலும் சிலர் குற்றவாளிகள். இதுபோன்ற அரைவேக்காட்டுத் தகவல்களை யார் வழங்குகிறார்கள் எனத் தெரியவில்லை." - மார்கோ ரூபியோ
"Ready to Bomb the Capital?" Marco Rubio on the 'Dirty Bomb' Threat: The Next Phase of the US-Iran War?
``தலைநகரிலேயே குண்டு போட தயாரா?" 'Dirty Bomb' என்பது என்ன.. அமெரிக்கா - ஈரான் போரின் அடுத்தகட்டமா?
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், டி.சி.-யில் டர்ட்டி பாம் (Dirty Bomb) தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகச் செய்தி அறிக்கைகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் 9 மாதங்களாக நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் போரில், அமைதி ஒப்பந்தம் கண்ணுக்கே தெரியாத நிலையில் நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. இதுவரை அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தென்படும் கப்பல்களைத் தாக்கி வந்த ஈரான், அமெரிக்காவுக்குள்ளேயே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

ட்ரம்ப் அரசின் முக்கியப் புள்ளிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டர்ட்டி பாம் மட்டுமல்லாமல், வேதியியல் ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தாய் நாட்டுக்கு எந்த உடனடி ஆபத்தும் இல்லை எனக் கூறி வருகிறார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ.

மார்கோ ரூபியோ.
மார்கோ ரூபியோ.

மார்கோ ரூபியோ மறுப்பு

பிலிபைனஸ் நாட்டில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்து சாத்தியங்கள் குறித்தும் நான் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது உடனடி ஆபத்து எதுவும் இல்லை.

எங்களுக்கு தினசரி மிரட்டல்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நம்பகத்தனமானவை இல்லை.

ஊடகங்களுக்கு உளவு தகவல் வழங்கும் சில பொய்யர்கள். மேலும் சிலர் குற்றவாளிகள். இதுபோன்ற அரைவேக்காட்டுத் தகவல்களை யார் வழங்குகிறார்கள் எனத் தெரியவில்லை.

நமது உளவுத்துறை சேவைகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற விஷயங்களை முன்கூட்டியே கண்டறியும் திறன் நமது அமைப்புகளுக்கு உண்டு.

ஈரானியர்கள் 1979-ஆம் ஆண்டிலிருந்தே 'அமெரிக்காவுக்கு மரணம்' என்று கோஷமிட்டு வருகின்றனர்." எனப் பேசியுள்ளார்.

 ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராச்சி.
ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராச்சி

குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான்

ஈரான் அமெரிக்காவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது இஸ்ரேல் ஆதரவு ஊடகங்களின் வேலை எனக் கூறியுள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராச்சி. மேலும் ஈராக் மீது தாக்குதல் நடத்த தவறான தகவல்கள் பரப்பி பிரசாரம் மேற்கொண்டது போல இப்போதும் பிரசார செய்ய வேண்டாம் என ஈரான் தெரிவித்துள்ளது.

Dirty Bomb என்பது என்ன?

டிர்டி பாம், டைனமைட் போன்ற வழக்கமான வெடிபொருட்களுடன், கதிரியக்கத் தூள் அல்லது சிறு உருண்டைகளைக் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் வெடிக்கும்போது சுற்றியுள்ள பகுதிகளில் கதிரியக்க துகள்கள் பரவும்.

இது அணுக்களை பிளந்து பெரு வெடிப்பை ஏற்படுத்துவது போன்றது அல்ல. டைனமைட் வெடிப்புதான் முக்கிய தாக்குதல். கதிரியக்க துகள்கள் உடனடியாக பெரிய அளவுள் நோய்களை ஏற்படுத்தாவிட்டாலும் வெடிக்கப்படும் இடத்தை சுற்றியிருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

"Ready to Bomb the Capital?" Marco Rubio on the 'Dirty Bomb' Threat: The Next Phase of the US-Iran War?
கடலில் காத்திருக்கும் ஆபத்து... கண்ணிவெடியில் சிக்கியதா எண்ணெய் கப்பல்கள்? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.