

விமானம் காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் மேலான நிலையில், காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று மலேசியா அரசு அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து வரலாற்றின் தீர்க்கப்படாத மாபெரும் மர்மங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு இன்றுவரை அவிழ்க்கப்படாத ஒரு முடிச்சாகவே இருந்துள்ளது. 239 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது ரேடார் திரைகளில் இருந்து மொத்தமாக மறைந்து போனது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் சீனர்கள், மீதமுள்ளவர்களில் மலேசியர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்களுடன், இந்திய, அமெரிக்க, டச்சு மற்றும் பிரெஞ்சு நாட்டினரும் அதில் பயணித்தனர். விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அந்த விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நீட்டிப்பு 2027 ஜூன் 30 வரை நீடிக்கும் என்றும், 'ஓஷன் இன்ஃபினிட்டி' என்ற ஆய்வு நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இது தக்கவைத்துக் கொள்ளும் என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஜூன் 29, 2026 அன்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் விமானத்தை 'கண்டுபிடிக்கவில்லை என்றால் கட்டணம் இல்லை' என்ற கொள்கையும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 'ஓஷன் இன்ஃபினிட்டி'க்கு 70 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
"MH370 விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்களுக்கு இந்த நிகழ்வு குறித்து ஒரு நிறைவை வழங்குவதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது. "இந்த நீட்டிப்புக்கான ஒப்புதலானது, மீதமுள்ள 7,428.54 சதுர கிலோமீட்டர் (2,868 சதுர மைல்கள்) தேடுதல் பகுதியை அந்த நிறுவனத்தால் முழுமையாக தேடி முடிக்க வழிவகுப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று அவர் மேலும் கூறியுள்ளார். மேலும், இந்த தேடுதல் பணியானது கடல் அமைதியாக இருக்கும் பருவமான நவம்பர் 2026 முதல் ஏப்ரல் 2027 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகச் சமீபத்தில் இந்த விமானம் குறித்த தேடலானது, 2025 மார்ச் மாதம் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஆனால் அந்த தேடுதல் வேட்டை கைக்கொடுக்கவில்லை. விமானம் காணாமல் போனதன் 12-வது ஆண்டு நினைவு நாளான மார்ச் 8 அன்று, சீனப் பயணிகளின் குடும்பத்தினர், சமீபத்திய தேடலின் போது தங்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று விமர்சித்து ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல், தேடுதல் நடவடிக்கை குறித்து குடும்பங்களுக்கு வேறு எந்த விளக்கங்களும் அளிக்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. 'ஓஷன் இன்ஃபினிட்டி' 2018-ல் இதற்கு முன்பு நடைபெற்ற தோல்வியுற்ற தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் முயற்சி செய்யவுள்ளது. அதைப் போலவே ஆஸ்திரேலியாவும் கடந்த ஜனவரி 2017 வரை மூன்று ஆண்டுகளுக்குத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்