நேபாள வெள்ளம்: பசி, இருள், 9 நாட்கள் மரண போராட்டம்... சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

சுரங்கங்களின் நுழைவாயில்கள் 10 அடிக்கும் மேலாக சேறு மற்றும் பாறைகளால் அடைபட்டுள்ளதால், அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
"என் அண்ணன் உயிருடன் வந்துவிட்டார்..." 9 நாள் மரண போராட்டம்... மீண்டு வந்த 2 தொழிலாளர்கள்!
"என் அண்ணன் உயிருடன் வந்துவிட்டார்..." 9 நாள் மரண போராட்டம்... மீண்டு வந்த 2 தொழிலாளர்கள்!
Published on
Updated on
2 min read

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் ஏற்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி 3A (Trishuli 3A) நீர்மின் நிலைய சுரங்கத்திற்குள் பணியாற்றி வந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோஷி (Bhotekoshi) நதியில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இதுவரை 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் கணிசமானவர்கள் சுரங்கங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க நேபாள ராணுவமும், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்களும் இணைந்து இரவு பகலாகப் போராடி வருகின்றன.

சுரங்கத்தின் நுழைவாயில் சேறு, சகதி மற்றும் இடிபாடுகளால் முற்றிலும் மூடப்பட்டுள்ளதால், அவை மரணக் குழிகளாகவே உள்ளன.

சுரங்கத்திற்குள் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ மொத்த எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திரிசூலி பகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள ரசுவாகாதி, லாங்டாங் மற்றும் மேல் திரிசூலி போன்ற சுமார் 11 முதல் 15 நீர்மின் நிலையத் திட்டப் பகுதிகளில் 600 முதல் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களைத் தொடர்புகொள்வது முடியாத காரியமாக உள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களில் நேபாளம், இந்தியா, சீனா, தென் கொரியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். சுரங்கங்களின் நுழைவாயில்கள் 10 அடிக்கும் அதிகமான சேறு மற்றும் பாறைகளால் அடைபட்டுள்ளதால், அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேபாள எம்.பி. ஸ்ரீராம் நியூபனே, சஞ்சய் ஷா (Sanjay Shah - மெக்கானிக்கல் ஃபோர்மேன்) மற்றும் கபீர் மகர்ஜன் (Kabir Maharjan - மெக்கானிக்கல் சூப்பர்வைசர்) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர்களின் உடல் முழுவதும் சேறு அப்பியிருந்தது. 9 நாட்கள் உணவோ, போதிய வெளிச்சமோ இல்லாமல், ஒவ்வொரு நொடியும் மரண பயத்தில் அவர்கள் கடந்துள்ளனர்.

மீட்கப்பட்ட கபீர் மகர்ஜனின் சகோதரி கண்ணீர்மல்க, "என் அண்ணன் உயிருடன் வந்துவிட்டார்... இப்போதுதான் என் இதயம் லேசாகியிருக்கிறது" எனக் கூறி அழுதுள்ளார். 9 நாட்கள் அண்ணனைக் காணாமல் தவித்த பெண்ணின் கண்ணீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதே திட்டத்தில் இன்னும் 557 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். முதன்மைச் சுரங்கப் பாதைக்குள்ளேயே 115 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்னும் சிலர் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

"என் அண்ணன் உயிருடன் வந்துவிட்டார்..." 9 நாள் மரண போராட்டம்... மீண்டு வந்த 2 தொழிலாளர்கள்!
வெள்ளம் விட்டுச் சென்ற மிகப்பெரிய வேதனை… காணாமல் போனவர்களை தேடி மருத்துவமனைகளில் காத்திருக்கும் குடும்பங்கள்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com