
கொரோனா பரவலுக்கு இடையே 2022 புத்தாண்டை கட்டுப்பாட்டுடன் கொண்டாட அனைத்து நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்த நிலையில், அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். தலைநகர் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டின் இரண்டு நிமிடத்துக்கு முன்பிலிருந்து கவுண்ட் டவுன் தொடங்கி ஸ்கை டவரில் டிஸ்பிளே செய்யப்பட்டது. கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு தொடங்கியதும் ஸ்கை டவரில் தயாராக இருந்த வான வேடிக்கைகள் வெடிக்கத்தொடங்கின. மக்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் குரலெழுப்பி 2022ஐ வரவேற்றனர் நியூசிலாந்துக்கு அடுத்த படியாக ரஷ்யாவில் மாலை ஐந்து முப்பது மணிக்கும், ஆஸ்திரேலியாவில் மாலை ஆறு முப்பது மணிக்கும் புத்தாண்டு பிறக்க உள்ளது ...