யாருக்கும் தெரியாமல் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வடகொரியா... 

யாருக்கும் தெரியாமல் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வடகொரியா... 

உலக நாடுகளின் கண்ணுக்குத் தெரியாத வகையில் ராணுவ பலத்தை அதிகரிக்க வட கொரியா திட்டமிட்டுள்ளது.
Published on

வட கொரியாவில் ஆளும் கட்சியின் 76வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ராணுவக் கண்காட்சி நடைபெற்றது. இதில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள், நிலம் மற்றும் நீரில் செலுத்தவல்ல நவீன ஏவுகணைகள், உயர் தொழில்நுட்ப ராணுவ தளவாடங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியை வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்கா தன் தவறான முடிவுகள் மற்றும் செயல்களால் இந்த பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், கொரிய தீபகற்பத்தில் நம்பகத்தன்மையற்ற சூழலை உருவாக்குவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com