அளவுக்கு அதிகமான சுமை...நிதி ஒதுக்கீடு தேவை...வலியுறுத்திய இந்தியா!!!

அளவுக்கு அதிகமான சுமை...நிதி ஒதுக்கீடு தேவை...வலியுறுத்திய இந்தியா!!!
Published on
Updated on
1 min read

ஐ.நா அவையின் பல்லுயிர் மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்க புதிய மற்றும் அர்ப்பணிப்புள்ள வழிமுறையை உருவாக்க வேண்டும்.  அதற்கான நிதியையும் விரைவில் உருவாக்க வேண்டும்.

உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு:

கனடாவின் மாண்ட்ரீலில் நடந்த உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா. மாநாட்டில் (COP 15) பல்லுயிர் பாதுகாப்புக்காக புதிய மற்றும் அர்ப்பணிப்புள்ள வழிமுறையை உருவாக்க வேண்டும் என இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் வலியுறுத்தியுள்ளார்.  மேலும் அதற்கான நிதியை உருவாக்குவதற்கான அவசரத் தேவையையும் விளக்கியுள்ளார் பூபேந்திர யாதவ்.  

அதிகமான சுமை:

பருவநிலை மாற்றமும் பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கிறது என்பதால், பல்லுயிர் பாதுகாப்பு பொறுப்புகள் திறன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வளரும் நாடுகள் பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை செயல்படுத்துவதில் அதிக சுமைகளை சுமக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார் பூபேந்திர யாதவ்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com