இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் 29.7°C! பேராபத்தை எதிர்கொள்ளப் போகிறதா உலகம்? விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்

உலகளவில், கடுமையான வெள்ளம், பஞ்சம், மழையின்மை, கடுமையான வெப்பம் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
El Niño impact
El Niño impact
Published on: 
Updated on: 
1 min read

பசிபிக் பெருங்கடலின் ஒரு முக்கியப் பகுதியில், கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் முன்னெப்போதும் இல்லாத உயர்வு ஏற்பட்டுள்ளதாக கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. ஏற்கனவே எல் நினோ தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த உச்ச வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.

நினோ3.4 என அறியப்படும் இந்தப் பகுதியில், கடந்த மாதம் 29.7°C என்ற "வரலாற்று உச்சபட்ச" வெப்பநிலையானது பதிவாகியுள்ளது. இது, 1982-1983, 1997-1998 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வுகளின் போது பதிவான உச்சபட்ச வெப்பநிலையை விட இது அதிகம் எனக்கூறப்படுகிறது.

இயற்கையாக நிகழும் இந்த எல் நினோ வெப்பமண்டல கிழக்கு பசிபிக் முழுவதும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரிக்கிறது. இது உலகெங்கிலும் மழைப்பொழிவு மற்றும் வறட்சிப் போக்குகளில் தீவிர மாற்றங்களைத் தூண்டுகிறது. இந்த எல் நினோவால் ஏற்கனவே உலகளவில் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. உலகளவில், கடுமையான வெள்ளம், பஞ்சம், மழையின்மை, கடுமையான வெப்பம் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

குறிப்பாக, வெப்ப அதிகரிப்பின் தாக்கத்தின் காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 4,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று அறிவியலாளர்ககணித்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை வெப்ப அலையின் காரணமாக பல மக்கள் உயிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், காலநிலை தாக்க ஆய்வகத்தின் இணை நிறுவனரும், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், பேராசிரியர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் "451,000 பேர் என்ற மதிப்பீடு, நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கை" என்று தெரிவித்திருந்தார். நாடு வாரியாக நிகழப்போகும் உயிழப்புகள் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் 4-வது இடத்தினை பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆறு மாத கால மதிப்பீட்டின்படி வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 15,800-ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, இன்னும் எல் நினோ வெப்பநிலை உச்சத்தை அடைவதற்கு முன்பே, அதன் வெப்பநிலையானது அதிகரித்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சூப்பர் எல் நினோ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து வானிலை ஆய்வு நிறுவனங்களும் காலநிலை விஞ்ஞானிகளும் பல மாதங்களாக விவாதித்து வருகின்ற நிலையில், தற்போது அவர்களின் கணிப்புகள் உண்மையாகி வருவது என்பது வருங்காலத்தில் எல் நினோ-வின் தாக்கம் நினைத்ததை விட உக்கிரமாக இருக்குமோ? என்ற பேரச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com