பிரபாகரன் குறித்த பழ நெடுமாறன் கருத்து.... விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கமா?!!

பிரபாகரன் குறித்த பழ நெடுமாறன் கருத்து.... விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கமா?!!
Published on
Updated on
1 min read

பழ.நெடுமாறன் கருத்துக்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு சாதகமானதல்ல எனவும் இதுவரை இல்லாத அடக்குமுறைகளை உருவாக்க இது வழி வகுக்கும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

பாதகமானது:

பழ. நெடுமாறனது கருத்தக்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு சாதகமான கருத்துக்களாக தெரிவில்லை எனவும் இல்லாத அடக்குமுறைகளை உருவாக்க இது உதவலாம் எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வலுவான சான்று:

மேலும் பழ.நெடுமாறனது கருத்துக்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் கூட ஏற்றுக்கொள்வதாக இல்லை எனவும் புலிகளின் தலைவர் இறந்துவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகின்றது எனவும் அதற்கு தம்மிடம் வலுவான சான்றுகள் இருப்பதாக அது கூறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் கடந்த 13 வருடகாலத்தில் அவர் இருப்பதாக எந்த செய்திகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தெளிவுபடுத்த வேண்டும்:

பழ.நெடுமாறன் அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருப்பதாக தெரிவித்துள்ளார் எனவும் அது உண்மை எனவும் கூறி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளது உண்மையெனில் அவர் அதை தெளிவுப்படுத்த வேண்டும் என பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.  

யாருக்காக:

மேலும் யாருக்காக இவ்வாறான செய்திகளை சொல்கின்றார் என்ற பலவேறுபட்ட கேள்விகள் இதில் உள்ளன எனவும் இவ்வாறான செய்தி ஒன்றை சொல்லிவிட்டு வாயை மூடி மௌனமாக இருப்பதானால் எதனையும் சாதித்துவிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

தெளிவுப்படுத்த வேண்டும்:

இலங்கை மக்களுக்கு அவர் இதனை தெளிவுபடுத்தவேண்டும். எனக் கூறியுள்ள பிரேமச்சந்திரன் இலங்கை இரணுவம் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என கூறகின்றது எனவும் ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் மூலம் விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்படலாம் என அவர் நினைக்கிறார எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் பிரேமச்சந்திரன்.

மீண்டுருவாக்கம்:

உருவானால் சிங்கள இனவாத கட்சிகள் தரப்பில் மீண்டுருவாக்கம் கருத்து  உருவாக்கப்படலாம் எனவும் அதன்காரணமாக, தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு எதிராக பல்வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுக்கலாம் எனவும் கூறிய பிரேமச்சந்திரன் ஆகவே அவ்வாறான கருத்துக்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு சாதகமான கருத்துக்களாக தெரிவில்லை எனவும் கூறியுள்ளதோடு இல்லாத அடக்குமுறைகளை உருவாக்க இது வழிவகுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com