பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் விபத்து...திட்டமிடப்பட்ட சதியா?!!

பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் விபத்து...திட்டமிடப்பட்ட சதியா?!!
Published on
Updated on
1 min read

ஷெப்பர்டன் பஞ்சாபி சமூகத் தலைவர் தர்மி சிங், சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் அனைவரும் பஞ்சாபியர்கள் என கூறியுள்ளார். 

விபத்து:

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த வழக்கில், கார் ஓட்டுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  குற்றம் சாட்டப்பட்ட டிரைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது, ​​​​அவர்களின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  பலத்த காயம் அடைந்த டிரைவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அதே நேரத்தில், சாலை விபத்து தொடர்பாக, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ், கார் ஓட்டுநரை போலீசார் குற்றவாளியாக்கியுள்ளனர். 

நடந்தது என்ன?:

தகவலின் படி, ஜனவரி 4 ஆம் தேதி, கார் டிரைவர் ஹரிந்தர் சிங், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஷெப்பர்டன் நகருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்து நடந்தது.  அப்போது, அவரது டொயோட்டா கார் டிரெய்லர் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷெப்பர்டன் பஞ்சாபி சமூகத்தின் தலைவரான தர்மி சிங், சம்பவத்தை உறுதி செய்து, காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் அனைவரும் பஞ்சாபியர்கள் என்று கூறியுள்ளார். 

விசாரணை:

விபத்தில் இறந்த நான்கு பேரில், மூன்று பேர் மோதிய உடனேயே காரில் இருந்து கீழே விழுந்தததால் விபத்தின் போது பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  காரின் முன்பகுதி டிரெய்லரின் பக்கவாட்டில் மோதியதால் காரில் இருந்த மூன்று பயணிகள் காரில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com