ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 4 பேர் பலி.. 90க்கு மேற்பட்டோர் படுகாயம்!!

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கி  4 பேர் பலியான நிலையில், மேலும் 90க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 4 பேர் பலி..  90க்கு மேற்பட்டோர் படுகாயம்!!
Published on
Updated on
1 min read

ஜப்பானின் வடக்குபுறம் உள்ள புகுஷிமோ நகர் கடற்பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் அதிர்வு 7 புள்ளி 4 ஆக பதிவான நிலையில், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக ஒரு மீட்டர் தூரம் வரை சுனாமி அலைகள் எழும்பியுள்ளன. மேலும் கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டு, மரசாமான்கள் பல சேதமடைந்தன. சாலையில் மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்ததோடு, சிரோஷியில் புல்லட் ரயில் தடம் புரண்டது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் பியூமியோ கிஷிடா, நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 90க்கு மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது மின் இணைப்பு துண்டிப்பால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின் இணைப்பு இன்றி இரவை கழித்ததாகவும் கூறினார். இதனிடையே மீட்பு பணியை துரிதப்படுத்தியுள்ள ஜப்பான் அரசு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com