2025 வரை குறைவாக உண்ணுங்கள்- வடகொரிய மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் அறிவுறுத்தல்

2025 வரை குறைவாக உண்ணுங்கள்- வடகொரிய மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக  சீனாவில் இருந்து வரும் பல்வேறு உதவி பொருள்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்திருந்தார்.  

இதனால் அங்கு உணவு பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அணு ஆயுத சோதனை காரணமாக பல நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடையும் விதித்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

அந்நாட்டில் ஒரு கிலோ வாழைப்பழம் 3 ஆயிரம் ரூபாய்க்கும், ஷாம்பூ பாட்டில் 15 அயிரம் ரூபாய்க்கும் விற்கும் அளவுக்கு பஞ்சம் நிலவுகிறது.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். இது மக்களை மேலும் வதைப்பது போல் உள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com