கனடாவில் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமம் முடக்கம் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, கனடாவில் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமத்தை முடக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவில் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமம் முடக்கம் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அண்மையில் பள்ளி ஒன்றுக்குள் நுழைந்த 18 வயது இளைஞர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அதன் அண்டை நாடான கனடாவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், பொதுமக்கள் துப்பாக்கி பயன்படுத்தும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டும் வகையில், கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்தை  முடக்குவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என கூறப்படுகிறது. 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com