ஆறு கோடிக்கு ஏலம் போன இளவரசி டயனாவின் கார்....!!!!!

ஆறு கோடிக்கு ஏலம் போன இளவரசி டயனாவின் கார்....!!!!!
Published on
Updated on
1 min read

25 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி டயானா, ஆகஸ்ட் 1985 முதல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கருப்பு ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போவை ஓட்டினார்.

C462FHK என்ற பதிவு செய்யப்பட்ட கார்,  வார்விக்ஷயரில் உள்ள சில்வர்ஸ்டோன் ஏலத்தால் செஷயரில் வாங்குபவருக்கு விற்கப்பட்டிருந்தது.  இதுவும் டயனாவால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு காராகும்.

லீமிங்டன் ஸ்பாவை தளமாகக் கொண்ட ஏல நிறுவனம் விற்பனையில் இருந்தவர்களிடம் இது "அன்றைய கார்" என்று கூறியிருந்தது.

ஏலம்:

ரூபாய் 1 கோடியில் தொடங்கிய ஏலம் விரைவில் துபாய் மற்றும் கோவென்ட்ரியில் ஏலம் வாங்குபவர்களுக்கு இடையே ஒரு போட்டியாக மாறியது.

ஏலத்தில் நடுவில் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் ஏலம் துபாயின் செஷயருக்கு ஆதரவாக மாறியது.  இறுதியில் இங்கிலாந்தை சேரந்த ஜொனாதன் ஹம்பர்ட் ஏலத்தில் வெற்றி பெற்றார்.

ஏலதாரர் ஜொனாதன் ஹம்பர்ட்:

12 ஆண்டுகளில் நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையிலான வாகனத்தின் ஏலங்களைப் பெற்றவர் ஜொனாதன் ஹம்பர்ட்.

ஏலம் ஏறும் போது ஏலதாரர் ஹம்பர்ட் அவரது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கார் "வரலாற்றின் ஒரு பகுதியை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளதாக ஹம்பர்ட் கூறியுள்ளார்.

டயானா:

இளவரசி டயானா தனது சொந்த காரை ஓட்ட விரும்பினார்.  பயணிகள் இருக்கையில் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருடன், அவர் தனது சொந்த காரை ஓட்ட விரும்பினார். 

அதனால், வழக்கமாக வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்ட மாடலுக்குப் பதிலாக அவரது விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  ஒரே கருப்பு நிற கார் என்ற தனித்தன்மை கொண்ட கார் தயாரிக்கப்பட்டது.  ஃபோர்டு டயனாவின் பாதுகாப்பிற்காக  இரண்டாவது ரியர்-வியூ கண்ணாடி போன்ற அம்சங்களையும் சேர்த்தது.

ஜூன் 2021 இல், இளவரசி டயானா பயன்படுத்திய மற்றொரு ஃபோர்டு எஸ்கார்ட் ஏலத்தில் ரூபாய் 5 கோடிக்கு விற்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com