தமிழர்களை தொலைக்காட்சிகளில் கௌரவப்படுத்திய கத்தார் அரசு...

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்களின் பாடலை தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கத்தார் அரசு கௌரவப்படுத்தியது.
தமிழர்களை தொலைக்காட்சிகளில் கௌரவப்படுத்திய கத்தார் அரசு...
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை | மத்தியகிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால்பந்து போட்டியை உலக நாடுகள் பிரமிக்கும் வகையில் நேர்த்தியாக நடத்திவருகிறது. கால்பந்து போட்டிக்கான பிஃபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமின்றி, கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பார்வை கத்தார் தோகாவை நோக்கியே உள்ளது. கத்தாரில் பணி நிமித்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக  தமிழர்கள் ஏராளமானோர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

கத்தார் நாட்டுக்கு தமிழர்கள் சார்பில் நன்றி செலுத்தும் விதமாக கத்தார்-உலக கால்பந்து போட்டிக்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப்பாடலை தமிழ்மகன் அவார்ட்ஸ்-ஸின் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் இயக்கி உள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப் என்பவரின் பாடல் வரி மற்றும் இசையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆனந்த்அரவிந்தாக்சன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக அந்நாட்டின் அமைச்சர் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய தொலைக்காட்சியான கத்தார் டிவி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருதுமொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முகநூலில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பல ஆயிரம் லைக்குகளை அள்ளி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com