கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிஙப்பூரில் மேலும், 14 நாட்கள் தங்க அரசு அனுமதியளித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி!
Published on
Updated on
2 min read

இலங்கையில் தொடந்த பல பிரச்சனைகளுக்கு மத்தியில், அந்நாட்டின் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு சென்று சிங்கப்பூரில் பதுங்கி இருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அங்கிருந்தே, தனது ராஜினாமா கடித்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த ராஜபக்சே:

மாலத்தீவுகளில் பதுங்கி இருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அங்கிருந்து கடந்த ஜூலை 14ம் தேதி, சிங்கப்பூரை வந்தடைந்திருக்கிறார். 14 நாள் வருகைக்கான வீசாவைப் பெற்றிருந்த நிலையில், வருகிற ஆகஸ்டு மாதம் 11ம் தேதி அவரது விசா முடிவடைகிறது. இந்நிலையில், அவரது தங்கிருப்பிற்கான கால அவகாசம் மேலும் 14 நாட்களுக்கு நீடித்து அனுமதியளிக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

எப்போது திரும்புவார் ராஜபக்சே?

சிங்கப்பூரில் இருந்து ராஜபக்சே நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தனா, கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்த நிலையில், இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எந்த தேதிக்கு திரும்புவார் எனக் குறிப்பாக அவர் தெரிவிக்கவில்லை என்பதும், கோத்தபய ஓடவில்லை, ஒளியவும் இல்லை என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களின் விமர்சனம்:

இலங்கை நாட்டைச் சிதைத்து விட்டு தப்பி ஓடினார் என தந்நாட்டு மக்களால் விமர்சிக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியதாகவும், தற்போது ஒரு தனியார் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய அதிபர்:

கோத்தபய நாட்டை விட்டு வெளியேறிய பிறகு நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் டல்லஸ் அலஹபெருமாவைத் தோற்கடித்து ரணில் விக்ரமசிங்கே வெற்றிப் பெற்றார். நடக்கும் தொடர் போராட்டங்களை கைவிடக் கோராமல், அமைதியான முறையில் போராட்டங்களைத் தொடர கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அவதியில் பொது மக்கள்:

தற்போது இலங்கையில், பெட்ரோல் பங்குகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் மணிக்கணக்கில் காத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உணவுக்காகவும், அத்தியாவசிய பொருட்களுக்காகவும் தவித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கி இருக்கிறார் என்ற காரணத்தால், இலங்கையில் மேலும் பரபரப்பு உருவாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com