
மிகவும் அரிய வகையில் பிரம்மாண்டமான பாண்டம் ஜெல்லி மீன் அமெரிக்க பகுதியில் உள்ள கடலுக்கு பல அடி ஆழத்தில் தென்பட்டுள்ளது.
கடந்த 1899 ஆம் ஆண்டு இந்த வகை ஜெல்லி மீன்கள் 33 அடி நீள கால் போன்ற இழைகளுடன் காட்சியளித்தது.
தற்போது கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே வளைகுடாவில் கிட்ட தட்ட 3200 ஆழத்திற்கு அடியில் வலம் வந்த ஜெல்லி மீனை ரோபோக்களின் உதவியுடன் ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பதாவது, ராட்சத பாண்டம் வகையான ஜெல்லி மீன்கள் ஆர்க்டிக் தவிர அனைத்து கடல்பகுதிகளிலும் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.